PulseNews
சினிமா

சிவாஜி - பத்மினி க்ளாசிக், ராமராஜன் - கனகா காமெடி; கரகாட்டக்காரன் கதை இந்த படத்தின் காப்பி தான்: உண்மை உடைத்த கங்கை அமரன்

ராமராஜன் – கனகா நடிப்பில் வெளியாகி 30 ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் இன்றைக்கும் வரவேற்பை பெறும் அளவுக்கு இருக்கும் கரகாட்டக்காரன் தான் அந்த படம். தமிழ் சினிமாவில் எவர் கிரீன் காமெடி காட்சிகள் நிறைந்த திரைப்படம் கரகாட்டக்காரன். இந்த படத்தின் கதையை தாண்டி இதில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கவுண்டமணி – செந்தில் கூட்டணி இந்த படத்தில் பெரிய அளவில் காமெடி காட்சிகளை வொர்க்அவுட் செய்திருப்பார்கள். கரகாட்டக்காரன் 1989-ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான படம். ராமராஜன் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தின் மூலம் நடிகை கனகா தமிழ் சினிமாவில் அறிமுகமானர். மேலும் கவுண்டமணி செந்தில், கோவை சரளா, காந்திமதி, சண்முகசுந்தரம், சந்தானபாரதி, சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைத்திருந்தார். 2 கரகாட்ட கோஷ்டிக்கு இடையே நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து காமெடியாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த, இந்த படத்தில், கவுண்டமணி – செந்தில் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் பேசப்பட்டு வருகிறது. படத்தில் கவுண்டமணி செந்தில் இடையேயான இன்றுவரை பேசப்படக்கூடிய காமெடி காட்சிகளை கொடுத்துள்ளார். இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் எழுதி இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பல ஆண்டுகள் கடந்து இருந்தாலும், ராமராஜன் – கனகா ஜோடி, கவுண்டமணி – செந்தில் காமெடி காம்போ இன்றைக்கும் கரகாட்டக்காரன் படத்தை பற்றி ரசிகர்கள் மத்தியில் பேச வைத்துள்ளர். ஆனால் இந்த படம் சிவாஜி நடித்த ஒரு படத்தின் கதை தான் என்று கங்கை அமரனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 1968-ம் ஆண்டு சிவாஜி – பத்தினி நடிப்பில், வெளியான படம் தில்லானா மோகனாம்பாள். ஏ,பி.நாகராஜன் இயக்கிய இந்த படத்தில் நாகேஷ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஒரு நாதஸ்வர வித்வானுக்கும், நாட்டிய மங்கைக்கும் இடையே நடக்கும் காதல் தான் இந்த படத்தின் கதை. தடைகளை கடந்து எப்படி இவர்கள் இணைந்தார்கள் என்பதை சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தி இருப்பார்கள். இதை கரகாகட்டக்காரன் படத்தில் இரு கரகாட்ட கோஷ்டிகள், என்று மாற்றி எடுத்ததாகவும், சிவாஜி பத்மினியை பார்க்க செல்லும்போது பாலையா அவரை பார்த்து பாடுவது போல் வரும் பாடலுக்கு பதிலாகத்தான் இங்கு ஊரு விட்டு ஊரு வந்து பாடல் வைத்தோம் என்று கூறியுள்ளார். தில்லானா மோகனாம்பாள் (1968) படம் வெளியானி 21 ஆண்டுகள் கழித்து கரகாட்டக்காரன் (1989) வெளியானது. இரு படங்களுமே தமிழ் சினிமாவில் இன்றுவரை நிலைத்து நிற்கும் படங்களாக இருப்பது குறிப்பிடத்தகக்து.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சிவாஜி - பத்மினி க்ளாசிக், ராமராஜன் - கனகா காமெடி; கரகாட்டக்காரன் கதை இந்த படத்தின் காப்பி தான்: உண்மை உடைத்த கங்கை அமரன்
PulseNews சுருக்கம்

ராமராஜன் மற்றும் கனகா நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில் 1989-ம் ஆண்டு வெளியான 'கரகாட்டக்காரன்' திரைப்படம், முப்பது ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கவுண்டமணி மற்றும் செந்திலின் நகைச்சுவைக் காட்சிகள் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தன.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படும் 'கரகாட்டக்காரன்', சிவாஜி மற்றும் பத்மினி நடித்த பழைய திரைப்படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டது என்ற உண்மையை இயக்குனர் கங்கை அமரன் வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் கதைக்கரு மட்டுமின்றி, நகைச்சுவைக்காகவே இப்படம் இன்றும் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema