PulseNews
சினிமா

செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில் செம்ப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடப் போவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

8 வார கழித்து ஓடிடி ரிலீஸ்

திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 8 வாரங்களுக்கு பின்னரே ஓடிடியில் வெளியிட வேண்டும் என திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பல்வேறு மாதங்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். 8 வாரங்களுக்கு பின்பே திரையரங்குகளில் வெளியாகும் படத்தை ஓடிடியில் வெளியிடுவோம் என தயாரிப்பாளர்களிடம் கடிதம் பெற்ற பின்னரே படங்களை திரையரங்குகளில் வெளியிடுவோம் என விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்திருந்தது.

செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை

தயாரிப்பாளர்கள் சங்கத்தினரை கலந்தாலோசிக்காமல் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது என்றும் இதனை கண்டிக்கும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இணைந்து வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என்றும் தற்போது இடைக்கால படப்பிடிப்பில் இருக்கும் படங்களின் பணிகளையும் நிறுத்துவாக அறிவித்துள்ளது.

ஓடிடி நிறுவனங்களை சார்ந்திருக்கும் தயாரிப்பாளர்கள்

தமிழில் ஆண்டுக்கு 250 படங்களுக்கும் மேல் வெளியாகி வரும் நிலையில் ஒரு சில படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றிபெறுகின்றன. பெரும்பான்மையான படங்கள் தோல்வியை சந்திக்கும் நிலையில் தயாரிப்பாளர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 200 கோடி அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் முதலீடு செய்த பணத்தை திருப்பி எடுக்க ஓடிடி நிறுவனங்களையே சார்ந்திருக்கின்றன. இதனால் 8 வாரங்களுக்கு பின்பே திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கையை தயாரிப்பாளர்கள் சங்கங்கள் ஏற்க மறுத்துள்ளன.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
PulseNews சுருக்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை எட்டு வாரங்களுக்குப் பின்னரே ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema