PulseNews
சினிமா

‘அம்மா இறந்தும் படப்பிடிப்பில் கவனம்’ - ராதிகா குறித்து நெகிழ்ந்த ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படக்குழு

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நாக வம்சி தயாரித்திருக்க மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சூர்யா, ராதிகா, வெங்கி அட்லூரி, மமிதா பைஜூ உள்ளிட்டோர் பிரத்யேகமாக ஒரு நேர்காணலை கொடுத்துள்ளனர். அதில் பல்வேறு விஷயங்களை அவர்கள் பகிர்ந்திருந்தனர். அப்போது ராதிகா அவரது அம்மா இறந்த செய்து கேட்டு பின்பு நடித்தது குறித்து படக்குழுவினர் பகிர்ந்திருந்தனர். இயக்குநர் வெங்கி அட்லூரி கூறியதாவது, “ஒரு காமெடி காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது ராதிகா மேடமின் அம்மா இறந்துவிட்டதாக செய்தி வந்தது. ஆனால் ராதிகா மேம், இந்த சீனை முடித்துவிட்டு போகட்டுமா எனக் கேட்டார். நான் ஒரு செகண்ட் அப்படியே நின்றுவிட்டேன்” என்றார். தொடர்ந்து ராதிகா பேசும் போது, “நாங்கள் அந்த காமெடி சீனின் 85 சதவீதத்தை எடுத்து முடித்துவிட்டோம். மீதம் 5 ஷாட் மட்டும் தான் இருந்தது. அதை முடித்துவிட்டால் அந்த சீன் மொத்தமும் முடிந்துவிடும். அன்றைக்கு படப்பிடிப்பை நிறுத்தினால் திரும்பி எடுக்க 2 மாதங்கள் ஆகிவிடும். அப்போது வந்து இந்த சீனை எடுப்பது சாத்தியமில்லாத விஷயம். நான் அன்றைய படப்பிடிப்பிற்கே என் அம்மா சொன்னதால் தான் வந்தேன். அம்மா ஹாஸ்பிட்டலில் இருந்தார், மோசமான கண்டிஷன் எனத் தெரியும். ஆனாலும் ‘நீ ஷூட்டிங் போ’ என்றார். அதனால் தான் வந்து கலந்து கொண்டேன்” என்றார். பின்பு மமிதா பைஜூ பேசுகையில், “அன்றைய தினத்திற்கு முந்தைய நாள் தான் அவரின் அம்மாவுடன் எந்தளவு பினைப்பில் இருந்தார் என்பது குறித்து நானும் ராதிகா மேடமும் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் அடுத்த நாள் இறந்த செய்தி வந்தவுடன் எனக்கு மனம் உடைந்துவிட்டது. ராதிகா மேடமின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர் சீனை படித்துக்கொண்டிருந்தார். எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. அந்த தருணத்தில் ஒரு நடிகையாக உயர்ந்து நின்றார்” என்றார். அடுத்து சூர்யா பேசுகையில், “அம்மாவுக்கும் கலைக்கும் சமமான மரியாதையை கொடுக்க வேண்டும் என்று அவர் நினைத்ததால் தான் அவரை அப்படி நடந்து கொள்ள வைத்திருக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து அவரை கொண்டு வர என்னென்னமோ அவரிடம் பேசினேன்” என்றார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
‘அம்மா இறந்தும் படப்பிடிப்பில் கவனம்’ - ராதிகா குறித்து நெகிழ்ந்த ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படக்குழு
PulseNews சுருக்கம்

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த விளம்பரப் பணிகளின் ஒரு பகுதியாக சூர்யா, ராதிகா, வெங்கி அட்லுரி மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றனர். அப்போது, தனது தாயார் இறந்த பிறகும் கூட படப்பிடிப்பில் ராதிகா காட்டிய அர்ப்பணிப்பு குறித்து ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழுவினர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema