PulseNews
சினிமா

சந்தோஷ் நாராயணன் வீடியோ சர்ச்சை; ஷான் ரோல்டன் விளக்கம்!

சந்தோஷ் நாராயணன் - மன்னர் முத்து கூட்டணியில் கடந்த 8ஆம் தேதி ‘மன்னாரு’ என்ற ஆல்பம் பாடல் வெளியானது. இப்பாடலை கே.காட்டியன், கானா பிரான்​சிஸ் எழுதியுள்ளனர். கென் ராய்சன் இயக்​கி​யுள்​ளார். இது கானா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சந்தோஷ் நாராயணனும் மன்னர் முத்துவும் ஒரு வீடியோ வெளியிட்டனர். அதில் மன்னர் முத்து இன்றைக்கு என்ன பண்ணப் போகிறோம் என சந்தோஷ் நாராயணனிடம் கேட்க அதற்கு அவர், அன் -பிளக்டு(unplugged) வெர்ஷன் பன்னப்போறோம் என சொல்லுகிறார். உடனே அப்படியென்றால் என்ன என மன்னர் முத்து கேட்க அதற்கு ‘பாட்டு ஹிட்டாகிவிட்டது என நம்ப வைப்பது’ என கூறுகிறார். இது திரைவட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இசையமைப்பாளர் சாய் அபயங்கரைத் தான் கிண்டல் செய்வதாக கமெண்ட் தெரிவித்தனர். சாய் அபயங்கர் தான் தன்னுடைய பாடல்களுக்கு அன் -பிளக்டு வெர்ஷன் வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் சூழலில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனும் சந்தோஷ் நாராயணன் வீடியோவில் சிரிக்கும் ஸ்மைலியை கமெண்ட் செய்தார். இதனால் இவரும் ரசிகர்களின் கருத்தை ஆதரிக்கிறாரோ என்று ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் ஷான் ரோல்டன் தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பொதுவாக நான் கமெண்ட்ஸுகளை படிப்பதில்லை. ஆனால் சிலர் என்னைக் குறிப்பிட்டுப் பதிவிடுகிறார்கள் (அதோடு கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்துகிறார்கள்). அதனால் இது குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். பல ஆண்டுகளாக சந்தோஷ் நாராயணனை எனக்குத் தெரியும் என்பதால், அந்தப் பதிவில் மகிழ்ச்சியாக கிண்டலுடன் கமெண்ட் போட்டேன். மற்றபடி எந்தவிதமான வெறுப்பும் இல்லை. அதனை ஒரு நகைச்சுவையை இயல்பாக எடுத்துக்கொள்ள நாம் அனைவரும் பழகிக்கொள்ள வேண்டும். அதேவேளையில், கலைஞர்களாகிய எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் துளியும் வெறுப்பு இல்லை என்பதை நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். நான் அன்பை மட்டுமே உள்வாங்கி வாழ்பவன், எனவே அனைவரும் பதற்றத்தைத் தவிர்த்து நிம்மதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். I generally don’t read comments, but some people are tagging me(followed by cuss words). So I thought I need to clarify! Knowing santy for so many years I know that there was just happy banter and no hate in this post. We should all learn to take a joke. And I want to underline... — Sean Roldan (@RSeanRoldan) August 20, 2026

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சந்தோஷ் நாராயணன் வீடியோ சர்ச்சை; ஷான் ரோல்டன் விளக்கம்!
PulseNews சுருக்கம்

சந்தோஷ் நாராயணன் மற்றும் மன்னர் முத்து கூட்டணியில் ‘மன்னாரு’ என்ற ஆல்பம் பாடல் கடந்த 8-ம் தேதி வெளியானது. கே.காட்டியன் மற்றும் கானா பிரான்சிஸ் வரிகளில், கென் ராய்சன் இயக்கத்தில் உருவான இந்த பாடல் கானா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இந்த ஆல்பத்தின் 'அன்பிளக்டு' (unplugged) வெர்ஷன் குறித்து சந்தோஷ் நாராயணனும் மன்னர் முத்துவும் உரையாடும் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவில் எழுந்த சர்ச்சை தொடர்பாக இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் விளக்கம் அளித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema