கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ரத்து; வீடியோ வெளியிட்டு ஹிப்ஹாப் ஆதி விளக்கம்!
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியின் இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்து இசையமைத்துள்ள படம் ‘மீசைய முறுக்கு 2’. முதல் பாகத்தின் வெற்றியால் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இப்படத்தை பென்ஸ் மீடியா மற்றும் அவ்னி மூவிஸ் தயாரிக்க கேதிகா சர்மா, சைத்ரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. இதனால் விளம்பரம் செய்வதில் படக்குழு இறங்கியுள்ளனர். அந்த வகையில் சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் நேற்று(09.08.2026) ஒரு விளம்பர நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஹிப்ஹாப் ஆதி கலந்து கொண்டு ரசிகர்களுடன் உரையாடி இசை நிகழ்ச்சியும் நடத்தவிருந்தார். இதனால் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். திட்டமிட்டபடி ஹிப்ஹாப் ஆதி மாலிற்கு சென்றடைந்தார். ஆனால் அவரால் மேடைக்கு ஏற முடியவில்லை. அவரைக் காணக் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருந்தது. இதனால் ரசிகர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கவும் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஆதி உடனே அங்கிருந்து கிளம்பினார். ரசிகர்களும் வெகுவாக கிளம்பி சென்றனர். நிகழ்ச்சி ரத்தானது குறித்து வீடியோ வெளியிட்ட ஹிப்ஹாப் ஆதி தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “உங்களையெல்லாம் பார்க்க ஆவலாக மாலில் காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் நிகழ்ச்சியை ரத்து செய்ய அறிவுறுத்தினர். உங்கள் பாதுகாப்பு தான் எனக்கு முக்கியம். அதனால் அவர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து உங்களைப் பார்க்கமுடியவில்லை என்ற வருத்தத்துடன் கிளம்புகிறேன். ஆனால் கூடிய விரைவில் மீண்டும் சந்திக்கலாம். எனக்காக வந்து காத்திருந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி, சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆதி கலந்துகொண்டு ரசிகர்களுடன் உரையாடி இசை நிகழ்ச்சி நடத்தவிருந்தார், ஆனால் அங்கு கூடியிருந்த கட்டுக்கடங்காத கூட்டத்தால் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்து ஹிப்ஹாப் ஆதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் காவல்துறையின் அறிவுறுத்தலை ஏற்று தான் அங்கிருந்து கிளம்பியதாகவும், கூடிய விரைவில் மீண்டும் ரசிகர்களைச் சந்திப்பேன் என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.