PulseNews
சினிமா

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. போக்ஸோ வழக்கில் சிக்கியும் திருந்தாத ஓட்டுநர்..!

ஐந்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுனர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஓட்டுநர்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கானை, இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜன். இவரின் மகன் அந்தோணி ராஜ் (வயது 26). இவர் சரக்கு வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இதையும் படிங்க: என் பேத்திக்கா செக்ஸ் டார்ச்சர் கொடுக்குறா? ஓடஓட விரட்டி வெட்டிய பாட்டி.. கரூரில் கறார் சம்பவம்.! ஐந்தாம் வகுப்பு மாணவி: இதனிடையே, அந்தோணி ராஜ் 2 நாட்களுக்கு முன்னர், வேறொரு கிராமத்தில் வசித்து வரும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். புகார்: இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறி இருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அந்தோணி ராஜை கைது செய்தனர். கைது: தொடர்ந்து கைது நடவடிக்கைக்குப்பின் அந்தோணி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் மீது கடந்த 2023 ம் ஆண்டில் போக்ஸோ வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் போக்ஸோ வழக்கு பதிவாகி இருக்கிறது. இதையும் படிங்க: "பதவி வேண்டுமா? வாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க" - தவெக நிர்வாகிக்கு எதிராக பெண் பகீர் புகார்.!

Tamil Spark15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. போக்ஸோ வழக்கில் சிக்கியும் திருந்தாத ஓட்டுநர்..!
PulseNews சுருக்கம்

விழுப்புரம் மாவட்டம் கானை இந்திரா நகரைச் சேர்ந்த அந்தோணி ராஜ் என்ற சரக்கு வாகன ஓட்டுநர், ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்தாம் வகுப்பு பயிலும் அச்சிறுமியிடம் அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கில் சிக்கியிருந்த அந்தோணி ராஜ், ஜாமீனில் வெளிவந்து மீண்டும் இத்தகைய குற்றச்செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema