PulseNews
சினிமா

மசாஜ் சென்டரில் பறிபோன தாலி செயின், அலச்சியமாக பதில் சொன்ன உரிமையாளர்: பிரபல நடிகை பரபரப்பு புகார்

குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமாகி பின்னாளில் சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை வினோதினி, ஸ்பாவுக்கு மசாஜ்க்கு போனபோது தனது தாலிச் செயின் பறிபோன சம்பவம் பற்றி உருக்கமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். 1982-ம் ஆண்டு விசு இயக்கத்தில் எஸ்.வி.சேகர் நடிப்பில் வெளியான மணல் கயிறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் வினோதினி. புதிய சகாப்தம், மண்ணுக்குள் வைரம், கமல்ஹாசனின் நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், 1991-ம் ஆண்டு சித்திரைப்பூக்கள், ஆத்தா உன் கோயிலிலே, என் ஆசை ராசாத்தி ஆகிய 3 படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். 1992 பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான வண்ண வண்ண பூக்கள் படத்தின் மூலம் ஹீரோயினாக களமிறங்கினார். வண்ண வண்ண பூக்கள் திரைப்படம், 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்த நிலையில், தேசிய விருதும் வென்றது. அதன்பிறகு பல வெற்றிப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த வினோதினி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமான இவர், ராதிகாவுடன் சித்தி, அகல் விளக்கு, வாணி ராணி, ரோஜா என பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது சன்டிவியின் சிறகுகள் சீரியலில் நடித்து வருகிறார், இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், நான் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்தேன். அதிலிருந்து வெளியே வருவதற்கு ஸ்பா போகலாம் என்று நினைத்து ஒரு ஸ்பாவுக்கு போனேன். அங்கு கழுத்துக்கு மசாஜ் பண்ண வேண்டும் என்பதற்காக என்னுடைய தாலி செயினை கழற்றி அதை ஒரு டப்பாவில் போட்டு வைக்க சொன்னார்கள். நானும் என்னுடைய தாலி செயினை கழட்டி அந்த டப்பாவில் போட்டுவிட்டேன். அதற்கு அப்புறம் மசாஜ் எல்லாம் முடிந்தது. அப்போது நான் அரை தூக்கத்தில் இருந்தேன். இருக்கிற டென்ஷன் எல்லாம் குறைந்தது போல இருந்தது. அந்த நேரத்தில் என்னுடைய கணவர் குடும்பத்தில் ஒரு துக்க நிகழ்வு என்று எனக்கு போன் வந்தது. உடனே விஷயத்தை கேட்டு மனம் வருந்தி அங்கிருந்து கிளம்பிவிட்டேன். மாடியிலிருந்து கீழே வரும்போது அங்கே வேலை பார்க்கிற ஒரு பொண்ணு என்னுடைய செருப்பை ஒரு தட்டில் வைத்து கொண்டு வந்து கொடுத்தாங்க. அதை வாங்கி போட்டுக்கிட்டு நானும் அங்கிருந்து கிளம்பிட்டேன். அடுத்த நாள் நான் துக்க வீட்டுக்கு போயிட்டேன். அந்த நேரத்துல தாலி பற்றி நான் டோட்டலா மறந்துட்டேன். அடுத்த நாள் தான் தாலி செயின் காணாமல் போனது ஞாபகத்திற்கு வந்தது. உடனே ஸ்பாவுக்கு போன் பண்ணி விசாரித்தேன். ஆனால் அங்கிருந்து எனக்கு எந்த பதிலும் சரியாக கிடைக்கவில்லை. அதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறேன். பிறகு ஸ்பா நிர்வாகத்திடம் இருந்து போன் செய்து, என் மீது தான் குற்றம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் தாலி செயினை கழட்டி வைத்ததை, எடுக்காமல் போனது தப்பு, அதை தேடி அடுத்த நாள் வராமல் போனது தப்பு, எங்கள் நிர்வாகத்தில் யாரும் திருட மாட்டார்கள் அவர்களை மீது நீங்கள் குறை சொல்லி இருப்பது தப்பு என்று என் மீது எல்லா தப்பையும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த வீடியோவை நான் போடுவதற்கு காரணம் விலை உயர்ந்த நகைகள் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பெண்கள் ஸ்பாக்களுக்கு போகும்போது விலை உயர்ந்த நகைகளை யாரும் அணிந்து போக வேண்டாம். View this post on Instagram A post shared by Lakshmi K R (@vinodhini_swetha) நான் வெளியில் சிரித்துக்கொண்டு பேசுகிறேன். ஆனால் உள்ளுக்குள் வேதனை அதிகமாக உள்ளது. என் தாலி செயின் கிடைக்க வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். எனக்காக நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள் என்று வினோதினி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மசாஜ் சென்டரில் பறிபோன தாலி செயின், அலச்சியமாக பதில் சொன்ன உரிமையாளர்: பிரபல நடிகை பரபரப்பு புகார்
PulseNews சுருக்கம்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, மணல் கயிறு, நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை வினோதினி, மசாஜ் சென்டர் ஒன்றில் தனது தாலிச் சங்கிலியைப் பறிகொடுத்துள்ளதாகப் பரபரப்புப் புகார் அளித்துள்ளார். அங்கு மசாஜ் செய்து கொண்டிருந்தபோது இந்தத் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தான் வெளியிட்ட வீடியோவில், தாலிச் சங்கிலியை இழந்தது குறித்து மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் கேட்டபோது, அவர் அலட்சியமாகப் பதிலளித்ததாக வினோதினி குற்றம் சாட்டியுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான அனுபவம் குறித்து அவர் உருக்கமாகப் பேசியுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema