மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவர் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு அரசுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் மனதார நன்றி
தமிழ்நாட்டு மண்மணத்தை தரணியெங்கும் வீசவிட்ட தமிழ் திரைப்பட வரலாற்றில் தங்க ஏடுகளை தனதாக்கிக் கொண்ட இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் நினைவை போற்றும் வகையில் அவர் பிறந்த மண்ணில் மணிமண்டபம் அமைத்திட செய்யும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவர் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு அரசுக்கும் தென்னிந்திய நடிகர் மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. CM – Thanks letter

இயக்குநர் பாரதிராஜாவின் புகழைப் போற்றும் வகையில், அவர் பிறந்த மண்ணில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவருடைய தலைமையிலான அரசுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ் திரைப்பட வரலாற்றில் சிறந்து விளங்கும் இயக்குநர் பாரதிராஜாவின் நினைவைப் போற்றும் இந்தச் செயலுக்கு, நடிகர் சங்கம் தனது நன்றியைப் பாராட்டுக்களுடன் பதிவு செய்துள்ளது.