த்ரிஷா முதல் சமந்தா வரை, சாய் பல்லவிக்கு பதில் ராமாயணம் சீதை கேரக்டருக்கு யார் பொருத்தம்? ஏ.ஐ. போட்டோக்கள் வைரல்
பாலிவுட்டில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ராமாயணம்’. 2 பாகங்களாக தயாராகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டும், 2-ம் பாகம் அடுத்த ஆண்டும் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து, இப்படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரமிக்க வைக்கும் தயாரிப்பு மற்றும் காட்சியமைப்புடன், இந்திய சினிமாவில் இதுவரை காணாத ஒரு பிரம்மாண்டமான காட்சி அனுபவத்தை ‘ராமாயணம்’ வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ஸ்ரீராமராக ரன்பீர் கபூரின் நடிப்பும், சீதையாக சாய் பல்லவியின் தோற்றமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவர்களை விட யஷ் ஏற்றுள்ள ராவணன் கேரக்டருக்கு அதிக பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. அதே நேரத்தில், ஸ்ரீராமர் மற்றும் சீதை கேரக்டர்களுக்கு வேறு நடிகர்களையும் தேர்வு செய்திருக்கலாம் என சமூக வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சாய் பல்லவிக்கு பதிலாக சீதையாக யார் நடித்திருந்தால் பொருத்தமாக இருக்கும் என்பதை கற்பனை செய்து, சில பிரபல நடிகைகளின் தோற்றங்களை ஏ.ஐ. மூலம் உருவாக்கியுள்ளனர். இந்தப் படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன. ஐஸ்வர்யா ராய், ஆலியா பட் தொடங்கி, த்ரிஷா, சமந்தா, ராஷ்மிகா மந்தனா, மஞ்சு வாரியர், காவ்யா மாதவன் வரை பலரும் சீதை கதாபாத்திரத்தில் இருப்பது போன்ற ஏ.ஐ. புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. View this post on Instagram A post shared by artillense (@artillense) மேலும், தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா கிருஷ்ணன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா ரூத் பிரபு, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதி ஹாசன், தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரையும் சீதை கதாபாத்திரத்தில் சித்தரித்து ஏ,ஐ, புகைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல், பாலிவுட் நடிகைகளான அனுஷ்கா சர்மா மற்றும் தீபிகா படுகோனே ஆகியோரின் சீதை கதாபாத்திர தோற்றங்களும் AI மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்து வரும் இந்த ஏ.ஐ புகைப்படங்களை ஆர்ட்டிலன்ஸ் (‘artillense’) என்ற கணக்கு பகிர்ந்துள்ளது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் 'ராமாயணம்'. இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவிக்கு பதிலாக வேறு எந்த நடிகைகள் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று ரசிகர்கள் கற்பனை செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், த்ரிஷா, சமந்தா, ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளை சீதை வேடத்தில் சித்தரிக்கும் ஏ.ஐ (AI) புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 'ஆர்ட்டிலன்ஸ்' (artillense) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த கற்பனைப் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.