PulseNews
சினிமா

SJ Surya: "ஆபீஸ் பக்கம் வந்தா கொன்னுடுவேன்.." எஸ்ஜே சூர்யாவை விரட்டிவிட்ட பாரதிராஜா!

தமிழ் திரையுலகின் மிகவும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் எஸ்ஜே சூர்யா. இவர் தற்போது நடிகர் கார்த்திக் நடிக்கும் சர்தார் 2ம் பாகத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இந்த படத்திற்காக எஸ்ஜே சூர்யா - கார்த்திக் - மித்ரன் ஆகியோர் இணைந்து பேட்டி அளித்தனர். அப்போது, எஸ்ஜே சூர்யா பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, அவர் கூறியதாவது,

கோழி வைத்திருந்தது ஏன்?

கிழக்குச் சீமை படத்தில் எதற்காக கோழி வைத்திருந்தேன் என்றால், கோழியை வைத்திருந்தால்தான் முன்னால் நிறுத்துவார்கள். ஷாட் முடிந்தாலும் அதை விடுவதில்லை. கோழியைத் தூக்கிக் கொண்டே திரியுறது. இப்போது, பாரதிராஜா சார் இல்ல. இருந்தாலும் ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.

கோழியை வைத்துக்கொண்டு இருந்தேன். நமக்கு வசனமே கிடைக்கவில்லை. என்னடா பண்றதுனு ஒரே தவிப்பா இருக்கும். மத்தவங்க பேசிட்டு இருப்பாங்க. நான் கோழியை வச்சுட்டு வாயை அசைச்சுட்டு இருப்பேன். டப்பிங்கில் ஏதாவது போட்றலாம்னு தோணுச்சு.

திட்டிய பாரதிராஜா:

டப்பிங்ல கூப்பிடுவாங்கனு நானும் வெளிய வந்து காத்திருந்தேன். அப்போ டைரக்டர் உள்ள டப்பிங்ல பாத்துருக்காரு. டேய் அவன் என்னடா பண்றான்? வாயை அசைக்கிறான். கூப்பிட்றா அவனைனு சொன்னாரு. சார் உள்ள விடமாட்டாரு. நான் வெளிய நின்னுட்டு இருந்தேன். வாய் அசைஞ்சுடுச்சுல. வந்து கூப்பிட்டு திட்றாரு. ஆபீஸ் பக்கம் வந்த கொன்னுடுவேன் உன்னைனு திட்றாரு.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிப்பில் தீவிரம்:

நடிகர் எஸ்ஜே சூர்யா இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர். எஸ்ஜே சூர்யா 1988ம் ஆண்டு நெத்தியடி என்ற படத்தில் சாதாரண கிராமத்து நபராக அறிமுகமாகியிருப்பார். கிழக்கு சீமையிலே, ஆசை, குஷி படங்களில் பெயரிடப்படாத சில நொடிகளில் வந்திருப்பார்.

பாரதிராஜா, வசந்த் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிறகு வாலி படம் மூலமாக இயக்குனராக 1999ம் ஆண்டு அறிமுகமானார். பின்னர், குஷி, நியூ, அன்பே ஆருயிருரே ஆகிய பல படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக 2015ம் ஆண்டு இசை படத்தை இயக்கிய பிறகு முழுக்க நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் எஸ்ஜே சூர்யா கில்லர் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

முன்னணி கதாநாயகர்கள் அனைவரது படங்களிலும் தவிர்க்க முடியாத வில்லனாக தற்போது எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார். ஜெயிலர் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ப்ரோ கோட், கில்லர் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
SJ Surya: "ஆபீஸ் பக்கம் வந்தா கொன்னுடுவேன்.." எஸ்ஜே சூர்யாவை விரட்டிவிட்ட பாரதிராஜா!
PulseNews சுருக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே. சூர்யா, தற்போது கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எஸ்.ஜே. சூர்யா, தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது, 'கிழக்குச் சீமையிலே' படத்தில் தான் கோழி வைத்திருந்தது ஏன் என்பது குறித்து அவர் விளக்கம் அளித்தார். அந்த சமயத்தில், தன்னை அலுவலகம் பக்கம் வந்தால் கொன்றுவிடுவேன் என்று பாரதிராஜா விரட்டியதாக சுவாரஸ்யமான தகவலை எஸ்.ஜே. சூர்யா தெரிவித்தார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema