‘ஃபேன் பாய் சம்பவம்னா என்னன்னு காட்டுறேன்’ - மீண்டும் வில்லனாக மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா
சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்திருந்த ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், யூகி சேதி உள்ளிட்ட நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர். இவர்களோடு புதிதாக மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் புதிதாக இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். இது அவருக்கு 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு 2024ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கி பட கட்டங்களாகப் பல இடங்களில் நடந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவுபெற்றது. இதையடுத்து டப்பிங் பணிகள் தொடங்கியது. இதனிடையே படத்தின் முன்னோட்டம் வெளியானது. அதில் சீன அதிகாரிகளுடன் கார்த்தி சண்டையிடும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. பின்பு கடந்த ஜூலையில் படத்தின் டீசர் வெளியாகியிருந்தது. அதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 10ஆம் தேதி பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உட்பட மொத்தம் 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இதனிடையே தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் முதல் பாகத்தில் ஃபிளாஷ்பேக்கில் வந்த அப்பா கார்த்தி நாட்டை காப்பாற்ற ஒரு மிஷினை வெற்றிகரமாக முடிக்கிறார். ஆனால் அதில் கொல்லப்பட்ட மக்களுக்காக மிகவும் வருந்துகிறார். பின்பு இனிமேல் இதுபோல் நடக்காது என நம்பும் அவர் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்க எஸ்.ஜே.சூர்யா எண்ட்ரி ஆகிறார். பின்பு அவர் செய்யும் தீய செயலில் இருந்து மீண்டும் மக்களை காப்பாற்ற கார்த்தி ஏஜெண்டாக மாற இருவருக்கும் நடக்கும் மோதலே இபப்டத்தின் மீதிக்கதையாக டிரெய்லர் உணர்த்துகிறது. இடையே முருகன் செண்டிமெண்ட், ஸ்டைலிஷான ஆக்ஷன், த்ரில்லர் என பயணிக்கிறது. ஒரு இடத்தில் கார்த்தியை பார்த்து உன்னுடைய தீவிர ரசிகன் நான் எனக் கூறும் எஸ்.ஜே.சூர்யா இறுதியில் அவருடன் நேரடியாக சண்டையிடும் காட்சியில், ‘ஃபேன் பாய் சம்பவம்னா உனக்கு என்னன்னு காட்டுறேன்’ என சொல்கிறார். அதோடு டிரெய்லர் முடிகிறது. சமீப காலமாக வில்லனாக மிரட்டி வரும் எஸ்.ஜே.சூர்யா இதிலும் மிரட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன் மற்றும் யூகி சேதி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் புதியதாக இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார், இது அவருடைய 100வது திரைப்படமாகும். கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாகப் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.