படப்பிடிப்பு தளத்திற்கு சர்பிரைஸ் கொடுத்த இரண்டு பிரபலங்கள்!
ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் மற்றும் அவியேட் பிக்சர்ஸ் சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் டிசி படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ஒரு புதுப்படம் உருவாகிறது. இதில் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். படத் தயாரிப்பாளர் ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில், திரில்லர் கலந்த காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட பலர் முன்னணி நட்சத்திரங்களாக இணைந்து நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில் இபப்டத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முதல் நாளில் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் வருகை தந்து, படக்குழுவினரை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இவர்களின் வருகை படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. வித்தியாசமான கதைக்களத்தில், அனுபவம் வாய்ந்த நடிகர் பிரபு மற்றும் இளம் தலைமுறை நடிகர்கள் இணையும் இந்தப் புதிய படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர முக்கிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மற்றும் அவியேட் பிக்சர்ஸ் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் புதிய படப்பிடிப்பு தளத்திற்கு இரண்டு பிரபலங்கள் வருகை தந்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர். 'ரைட்டர்' பட இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் இந்தப் படம், டார்க் ஹியூமர் பாணியில் உருவாகிறது.
இப்படத்தில் பிரபு மற்றும் பிக்பாஸ் 7 புகழ் விஜய் வர்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களிலும், ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் ராகுலும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.