PulseNews
சினிமா

“என்னை மடியில் தூக்கி உட்கார வைத்தார்” – விஜயகாந்த் குறித்து நெகிழ்ந்த நடிகர் கிங் காங்!

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கிங் காங். வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், தனியாகவும் பல படங்களில் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ள கிங் காங், தற்போது திரைப்படங்களில் அதிகம் நடிப்பதில்லை. சில உடல்நலப் பிரச்னைகள் காரணமாக அவரது சினிமா பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தபோதிலும், தனது திறமையை மட்டுமே நம்பி தொடர்ந்து பயணித்தவர் கிங் காங். இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன்பு கிங் காங்கின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. மகள் காதலித்தவரையே திருமணம் செய்து வைக்க முடிவு செய்த கிங் காங், முதலில் திருமணத்தை எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், திரையுலகில் அவருக்கு இருந்த நீண்டகால நட்பு காரணமாக பல பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கினார். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், நடிகர்கள், இயக்குநர்கள் என பலரும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கும் திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கிங் காங்கின் வீட்டுக்குச் சென்று மணமக்களை வாழ்த்தினர்.இந்நிலையில், விஜயகாந்த் குறித்து கிங் காங் பேசியுள்ள பழைய நினைவுகள் தற்போது கவனம் பெற்றுள்ளன. அவர் அளித்த பேட்டியில், “மன்சூர் அலிகான் வீட்டு திருமணத்துக்கு சென்றிருந்தேன். அனைத்து நடிகர்களும் வந்திருந்தார்கள். திடீரென்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது. விஜயகாந்த் வருவதாக சொன்னார்கள். அவரிடம் சென்று வணக்கம் வைத்துவிட்டு வந்துவிடலாம் என்று நினைத்து அப்படியே சென்றேன். அருகில் சென்றதும் ‘வாங்க, வாங்க’ என்று சொல்லி, என்னை அவரது மடியில் தூக்கி உட்கார வைத்துக்கொண்டார். இரவு 11 மணிக்கெல்லாம் உங்கள் காமெடியைப் பார்ப்பேன் என்று சொன்னார். ‘கந்தசாமி’ படத்தில் நீங்கள் ஓட்டை பிரித்துக்கொண்டு வருவீர்களே என்று அதை மீண்டும் மீண்டும் சொல்லி சிரித்தார். ரொம்ப எதார்த்தமான மனிதர்” என்று கிங் காங் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் மறைந்த பிறகும் அவருடன் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் அவரது எளிமை, சக நடிகர்களிடம் காட்டிய அன்பு மற்றும் இயல்பான குணம் குறித்து தொடர்ந்து நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் கிங் காங் பகிர்ந்துள்ள இந்த சம்பவமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Seithipunal14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“என்னை மடியில் தூக்கி உட்கார வைத்தார்” – விஜயகாந்த் குறித்து நெகிழ்ந்த நடிகர் கிங் காங்!
PulseNews சுருக்கம்

90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்துப் புகழ்பெற்றவர் கிங் காங். வடிவேலு மற்றும் விவேக் உள்ளிட்ட பலருடன் இணைந்து பணியாற்றிய இவர், பிற மொழிப் படங்களிலும் தனது நகைச்சுவைத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது திரைப்படங்களில் அதிகம் நடிக்காத கிங் காங், உடல்நலப் பிரச்சனைகளால் தனது சினிமா பயணம் குறித்த பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்த் தன்னை மடியில் தூக்கி அமர வைத்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema