PulseNews
சினிமா

சூர்யாவை திசை திருப்பி காலில் ஆசி பெற்ற இயக்குநர்!

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நாக வம்சி தயாரித்திருக்க மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்தினர். அதில் சூர்யா, மமிதா பைஜூ, வெங்கி அட்லூரி உள்ளிட்ட அனைத்து படக்குழுவினரும் கலந்து கொண்டனர். மேலும் தங்களது பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது சூர்யா மேடையில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது சூர்யா அருகில் சென்ற இயக்குநர் வெங்கி அட்லூரி சூர்யாவை திசை திருப்பி திடீரென சூர்யாவின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். பின்பு வணக்கம் வைத்துவிட்டுப் பின்னோக்கி சென்றுவிட்டார். இதனைச் சற்றும் எதிர்பாராமல் இருந்த சூர்யா வெங்கி அட்லூரியை பாசமாக கோபித்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக சூர்யா ரசிகர்கள் இதை அதிகம் பகிர்ந்து வெங்கி அட்லூரியை புகழ்ந்து வருகின்றனர். He made us cry. Venky Atluri 🥹♥️ #VishwanathAndSons pic.twitter.com/PwcKtgQUt9 — Suriya Fans Trends (@Trendz_Suriya) August 11, 2026

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சூர்யாவை திசை திருப்பி காலில் ஆசி பெற்ற இயக்குநர்!
PulseNews சுருக்கம்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர், மேலும் ஜி.வி.பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சூர்யா, மமிதா பைஜூ மற்றும் இயக்குனர் வெங்கி அட்லூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின்போது இயக்குனர் வெங்கி அட்லூரி, சூர்யாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema