'ராக்கி பாய்' ஊருல இல்லையா? அடி வாங்குறதே அவருதானாம்..! ரசிகர்களை கதற விட்ட 'டாக்சிக்'.. மீம்ஸ்களால் சிதைத்த நெட்டிசன்கள்..!
நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்ததும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. என்ன 'THUG LIFE' வாடை அடிக்குது..! 'டாக்சிக்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானதுமே, "இது அதுல, 'என்ன THUG LIFE' வாடை அடிக்கிறதே என ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ் சத்தமாக கேக்க ஆரம்பித்தது. ஐயோ...விட்டுடுங்க 'ராக்கி பாய்'..! பிரம்மாண்ட பட்ஜெட்டில், பான் இந்தியா திரைப்படமாக 'டாக்சிக்' திரையரங்குகளில் வெளியானது. திரைப்படத்தை பார்த்த பலரும் திரையரங்குகளில் இருந்து தப்பித்து ஓடுவது போல சமூக வலைதளங்களில் மீம்ஸ் பரவி வருகிறது. மீம்ஸ் போட்டு சிதைத்த நெட்டிசன்கள் ராக்கி பாய் இருந்துமா இப்படி ஆச்சு? என கேட்பதும், அதற்கு அடிச்சதே 'ராக்கி பாய 'தான் என கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். படத்தின் விமர்சனங்களை பார்த்த சிலர் புக்கிங் செய்துவிட்டு டிக்கெட் கேன்சல் செய்ய முடியாமல் தவித்து வருவதாக பதிவிட்டு வருகின்றனர். படம் பார்க்க போனதில் ஒரே ஒரு நல்ல விசயம் என்னவென்றால், இடைவேளையிலேயே கிளம்பி வீட்டிற்கு வந்துவிடும் வசதி இருந்தது மட்டும் தான் என உயிர் பிழைத்தது போல மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். 'அசையாத மரம் ஒன்று' இன்னும் சிலர் 'அசையாத மரம் ஒன்று' என சோக பிஜிம் போட்டு இது தான் 'டாக்சிக்' விமர்சனம் என ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். லாஜிக்கா? அப்படி என்றால் என்ன? என கேட்கும் அளவிற்கும், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும் மட்டுமே திரைப்படம் முழுவதும் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. KGF படத்தில் யாஷ் எவ்வளவு புகழை சேர்த்து வைத்தாரோ, அதெயெல்லாம் இந்தப் படத்தில் போய்விட்டது என ரசிகர்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். -தயாநிதி

நயன்தாரா, கியாரா அத்வானி மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்த 'டாக்சிக்' திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான்-இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியானது. இப்படம் மீதான அதிக எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்குச் சென்ற ரசிகர்கள், படத்தின் காட்சிகள் 'தக் லைஃப்' படத்தைப் போல இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
'ராக்கி பாய்' கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் இப்படத்தின் ட்ரைலர் வெளியான போதே ரசிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்தன. தற்போது படம் வெளியான நிலையில், கதையையும் காட்சியமைப்பையும் வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்களைப் பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர்.