கட்டிப்பிடித்த அர்ஜூன், கன்னத்தில் அறைந்த சாமந்தி: ரேவதி - கார்த்தி இணைவார்களா? சீரியல் அப்டேட்
அரசியை தேடி வந்த ரகசிய கிப்ட்.. சந்தோஷத்தில் எல்லை மீறிய அர்ஜூன்.. பளார் என அறைந்த சாமந்தி! - சாமந்தி இன்றைய எபிசோட் அப்டேட் 'சாமந்தி' சீரியலின் நேற்றைய எபிசோடில் கோடீஸ்வரன் குடும்பத்தினர் பங்ஷன் மேடைக்கு செல்ல முயன்ற நிலையில், இன்றைய எபிசோடில், பங்ஷன் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் கோடீஸ்வரன் குடும்பத்தை மேடைக்கு ஏற விடாமல் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழல் உருவாகிறது. அடுத்ததாக ஆதவ், அரசி மற்றும் பயனுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான். அதே நேரத்தில், எதுவும் கொடுக்க முடியாமல் தனியாக நிற்கும் அர்ஜூனை பார்த்து ஆதவ் நக்கலாக கிண்டல் செய்கிறான். இதையெல்லாம் கவனித்த சாமந்தி, "டிரைவர் தம்பி... நான் ஒரு கிப்ட் தரேன், அதை நீ கொண்டு போய் கொடு" என்று அர்ஜூனிடம் சொல்கிறாள். முதலில் தயங்கும் அர்ஜூன், "வேணாம்... அவங்க மூஞ்சில தூக்கி எறிஞ்சா?" என்று பயப்படுகிறான். சாமந்தி, "நீதான் சீனியர் டிரைவர்... நீ கொடுத்தா கண்டிப்பா வாங்கிப்பாங்க!" என்று நம்பிக்கை கொடுக்க, பயந்தபடியே அந்த கிப்ட்டை எடுத்துக்கொண்டு செல்கிறான். அர்ஜூனை பார்த்ததும் அரசியின் முகம் மாறுகிறது. இருப்பினும் அவன் கொடுத்த பரிசை வாங்கிக் கொள்கிறாள். ஆனால் அதை மதிப்பில்லாத பரிசு போல 'பி கிரேடு கிப்ட்' பகுதியில் வைத்துவிட்டு அர்ஜூனை அவமானப்படுத்துகிறாள். இதை பார்த்த அர்ஜூன் மனம் உடைந்து சாமந்தியிடம் வந்து வருத்தத்துடன் விஷயத்தை சொல்கிறான். இதற்கிடையில் காட்டு ராஜா பங்ஷனுக்கு வருவது புதிய பரபரப்பை ஏற்படுத்துகிறது. சாமந்தி மற்றும் செண்பகத்தை அவன் பார்த்து விடுவானா என்ற பதற்றம் எகிறுகிறது. அதன்பிறகு காட்டு ராஜா ஒரு பரிசை கொடுக்க, அதை திறந்து பார்த்த அரசி, ராணியின் நெக்லஸ் போலவே இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறாள். ஆனால் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, "இது டூப்ளிகேட் தான்... சீக்கிரமே ஒரிஜினல் நெக்லஸ் உங்க கைக்கு வரும்!" என்று காட்டு ராஜா கூறுகிறான். அந்த நேரத்தில் அரசிக்கு திடீரென அர்ஜூன் கொடுத்த மரப்பொம்மை கிப்ட் நினைவுக்கு வருகிறது. உடனே அதை எடுத்து திறந்து பார்க்க, அதன் உள்ளே அவளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அந்த பொம்மையில் ராணியின் நெக்லஸ் டிசைனில் நகை இருப்பது தெரிய வருகிறது. இதனால் அதிர்ந்துபோகும் அரசி, உடனடியாக அந்த கிப்ட்டை 'ஏ கிரேடு கிப்ட்' பகுதிக்கு மாற்றி வைக்கிறாள். இதை பார்த்த அர்ஜூனின் சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் போகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் ஓடி வந்து சாமந்தியை கட்டிப்பிடிக்கிறான். ஆனால் எதிர்பாராத விதமாக, "என்ன பண்றீங்க டிரைவர் தம்பி?" என்று கோபமடைந்த சாமந்தி, பளார் என அர்ஜூனை அறைந்து விடுகிறாள்! அர்ஜூனின் இந்த செயலுக்கு பிறகு என்ன நடக்கப் போகிறது? சாமந்தியின் கோபம் அடங்குமா? காட்டு ராஜா கொண்டு வந்த ட்விஸ்ட்டின் பின்னணியில் என்ன ரகசியம் இருக்கிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கருவை கலைக்க திட்டமிடும் திவாகரன்.. இந்துவுக்கு ஆபத்து! - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட் சின்னஞ்சிறு கிளியே சீரியலின் நேற்றைய எபிசோடில், இந்து அக்கறையுடன் கர்ணாவுக்காக சூப் செய்து கொடுத்த நிலையில், அதை குடிக்க மறுத்த கர்ணா பின்னர் மனம் மாறியிருந்தான். இதனைத் தொடர்ந்து இன்று கதையில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறுகின்றன. அதாவது, இந்து "வேணும்னா புவனாவை கூப்பிட்டு கொடுக்க சொல்லட்டுமா?" என்று கேட்க, கர்ணா உடனே வேண்டாம், நானே குடிக்கிறேன் என்று கூறி சூப்பை வாங்கிக் குடிக்கிறான். மறுபக்கம், இந்துவின் கர்ப்பத்தை உண்மை என நினைத்து எப்படியாவது கலைக்க வேண்டும் என்ற கொடூர எண்ணத்தில் இருக்கும் கிருபாவும் திவாகரனும் புதிய சதித்திட்டம் தீட்டுகின்றனர். அதற்காக கர்ணாவை ஒரு முக்கிய வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்லும்படி ஏற்பாடு செய்கின்றனர். கர்ணா வெளியே சென்ற பிறகு, இந்துவுக்குக் கொடுக்கப்படும் ஜூஸில் கருக்கலைப்பை ஏற்படுத்தும் மருந்தைக் கலக்க திட்டமிடுகின்றனர். பின்னர் வீட்டில் அனைவருக்கும் ஜூஸ் வழங்கப்படும் நேரத்தில், சித்ரா ஏன் இந்த அக்காவுக்கு மட்டும் கொடுக்க மாட்டுறீங்க என்று கேட்க தங்களது திட்டத்தின்படி அந்த ஜூஸை இந்துவிடம் கொடுக்கின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக, ஜூஸ் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இந்து அதை உடனடியாக குடிக்காமல் வைத்திருக்கிறாள். அந்த சமயத்தில் ஜெயந்தி அந்த ஜூஸை எடுத்துக் குடிக்க முயற்சிக்க, பதறிப்போன திவாகரன் அவளைத் தடுத்து நிறுத்துகிறான். அவனுடைய அதிரடி நடவடிக்கையை பார்த்த இந்துவுக்கு ஏதோ சந்தேகம் ஏற்படுகிறது. இதையடுத்து ஜூஸை தனது அறைக்கு எடுத்துச் செல்லும் இந்து, இதில் ஏதோ கலந்திருக்கிற மாதிரி இருக்கு" என்ற சந்தேகத்துடன் செல்வியிடம் போன் செய்து பேசுகிறாள். இந்து நினைப்பது போல அந்த ஜூஸில் உண்மையிலேயே ஏதாவது கலந்திருக்கிறதா? திவாகரனின் சதித்திட்டம் அம்பலமாகுமா? என்ற பரபரப்பான கேள்விகளுடன் இன்றைய எபிசோட் நகரவுள்ளது. ரேவதியின் அடுக்கடுக்கான கேள்விகள்... சாமுண்டீஸ்வரிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி! இன்று கார்த்திகை தீபத்தில் பரபரப்பு உச்சம்! கார்த்திகை தீபம், சீரியலில் தினமும் எதிர்பாராத திருப்பங்களால் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது. நேற்றைய எபிசோடில் ரேவதி பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், இன்று கதைக்களம் மேலும் சூடுபிடிக்கிறது. அதாவது, கார்த்திக் மற்றும் ரேவதி சந்தித்துக் கொள்வதால் இருவரும் மகிழ்ச்சியடைகின்றனர். தொடர்ந்து, சாமுண்டீஸ்வரி தீட்டியுள்ள திட்டங்கள் குறித்து கார்த்திக் ரேவதியிடம் விவரமாக எடுத்துக் கூற, பல உண்மைகள் தெரிந்து ரேவதி அதிர்ச்சியடைகிறாள். மறுபக்கம், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யான தகவல் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய *முத்துவேலை* போலீசார் கைது செய்கின்றனர். "நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பினாலும், போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கின்றனர். இதையடுத்து வீட்டிற்கு வரும் ரேவதியை பார்த்த சாமுண்டீஸ்வரி, "நீ கனடா செல்லாமல் ஏன் திரும்பி வந்தாய்?" என்று கேட்கிறாள். அதற்கு அதிரடியாக பதிலளிக்கும் ரேவதி, "இதெல்லாம் உங்கள் திட்டம் என்பது எனக்கு தெரிந்துவிட்டது. கார்த்திக் தான் என்னுடைய கணவர் என்ற உண்மையை ஏன் மறைத்தீர்கள்?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி சாமுண்டீஸ்வரியை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறாள். ரேவதியின் இந்த நேரடி மோதலுக்கு சாமுண்டீஸ்வரி என்ன பதில் சொல்லப் போகிறாள்? இதுவரை மறைத்து வைக்கப்பட்ட ரகசியங்கள் அனைத்தும் வெளிவருமா? அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது, அதிரடி திருப்பங்களும், அதிர்ச்சிகரமான உண்மைகளும் நிறைந்த இந்த எபிசோடு குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சாமந்தி சீரியலின் இன்றைய எபிசோடில், விழா நடைபெறும் இடத்திற்குச் சென்ற கோடீஸ்வரன் குடும்பத்தினரை பாதுகாப்பு அதிகாரிகள் மேடைக்கு ஏற விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.
இதற்கிடையே, அரசிக்கு வந்த ரகசிய பரிசால் மகிழ்ச்சியில் எல்லை மீறிய அர்ஜூன் அவரை கட்டிப்பிடித்தார். இதனால் கோபமடைந்த சாமந்தி, அர்ஜூனின் கன்னத்தில் பளார் என அறைந்தார்.