நள்ளிரவில் நடைபாதையில் பெற்றோருடன் தூங்கிகொண்டிருந்த 4 வயது சிறுமி மாயம்! சிசிடிவி- யில் சிக்கிய அதிர்ச்சி காட்சி...!!!
விசாகப்பட்டினத்தில் பெற்றோருடன் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி நள்ளிரவில் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினம் வந்திருந்த தம்பதியினர், மகளுடன் நடைபாதையில் தூங்கியுள்ளனர். அதிகாலை 2.30 மணியளவில் சிறுமியைக் காணாததால் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். சிசிடிவியில் சிக்கிய ஸ்கூட்டர் காட்சி புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருவர் சிறுமியை ஸ்கூட்டரில் அழைத்துச் செல்வது பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் கஜுவாகா நோக்கிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவிக்கு உதவி செய்ய வந்த இடத்தில்.... டார்ச்சல் செய்த இளம்பெண்! கணவனை வளைத்து போட்ட கொடூரம்! ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி சம்பவம்!!! சிசிடிவி காட்சியில் பதிவான ஸ்கூட்டர் எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதன் அடிப்படையில் எஸ்.ராயவரத்தைச் சேர்ந்த பிரதிபா மற்றும் கிரிவிடியைச் சேர்ந்த உபேந்திரா ஆகியோர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிறுமியை தேடும் பணியில் 3 தனிப்படைகள் காணாமல் போன சிறுமியை விரைவாக மீட்கவும், சந்தேக நபர்களைப் பிடிக்கவும் மூன்று தனிப்படை காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் போலீசார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் தற்போதைய நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. நள்ளிரவில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை மாயமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையும் படிங்க: நள்ளிரவு நேரத்தில் முகமூடி ஆசாமி செய்த அலப்பறை...! இறுதியில் நடந்த பெரிய ட்விஸ்ட்.....!!!

விசாகப்பட்டினத்தில் நடைபாதையில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி நள்ளிரவில் மாயமாகியுள்ளார். விஜயவாடாவிலிருந்து வந்திருந்த அந்தத் தம்பதியினர், அதிகாலை 2:30 மணியளவில் தங்களது மகளைக் காணாமல் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் ஒரு ஸ்கூட்டரில் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டது பதிவாகியுள்ளது.