PulseNews
சினிமா

புரொமோஷன் தவிர்ப்புக்கு காரணம்... யஷ்ஷின் 4 ஆண்டு தியாகம் - மனம் திறந்து பேசிய நயன்தாரா

'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு மலையாள இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் ‘டாக்சிக்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் ஒரே சமயத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நயன்தாரா விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் கலந்தது கொள்ளாதது குறித்து பேசியிருந்தார். அவர் பேசியதாவது, “புரொமோஷனில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதல்ல விஷயம். அது எனக்கு சரியாக வராது, அதனால் அதை தவிர்த்து வருகிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சி எனக்கு ஸ்பெஷல். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று யஷ். அவர் தான் இந்த நிகழ்ச்சிக்காக போன் கால் செய்தார். அது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போதுமானதாக இருந்தது” என்றார். மேலும் யஷ் குறித்து பேசிய அவர், “நான் முதன்முதலில் யஷ்ஷைச் சந்தித்தபோது... என்னை நம்புங்கள், நான் பல சூப்பர் ஸ்டார்களுடன் பணியாற்றியிருக்கிறேன், அவர்கள் அனைவரும் சிறந்தவர்கள்தான், ஆனால் யஷ்ஷை முதன்முறையாகச் சந்தித்தபோது, ​​திரையில் அவருக்கு இருக்கும் அந்த பிரம்மாண்டமான பிம்பம் நிஜத்திலும் இருந்தது. 'ஓ, நான் என்ன 'ராக்கி பாய்'-இன் சாம்ராஜ்யத்திற்குள் நுழைகிறேனா என்று எனக்குத் தோன்றியது. டிரெய்லரில் அவரை எப்படிப் பார்க்கிறீர்களோ, அதேபோலத்தான் அவர் நிஜ வாழ்க்கையிலும் இருக்கிறார். அதைத் தாண்டி, அவரது பணி அர்ப்பணிப்பைப் பற்றிப் பலரும் பேசியிருக்கிறார்கள். ஆனால் நான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் கடின உழைப்பாளி நடிகர் இவர்தான் என்று சொல்வேன். படப்பிடிப்புத் தளத்தில் ஒவ்வொரு நாளும் அவர் பணியாற்றிய விதத்தைப் பார்த்து நான் வியந்துபோனேன். நான்கரை ஆண்டுகள் இப்படத்திற்காக அர்ப்பணித்திருக்கிறார். வாழ்க்கை, நேரம் மற்றும் குழந்தைகளுடன் கழிக்கக்கூடிய மகிழ்ச்சியான தருணங்கள் என அனைத்தையும் இதற்காகத் தியாகம் செய்திருக்கிறார். அவர் முழுமையாக வேலையில் மட்டுமே கவனம் செலுத்துபவர். அவர் ஒரு அசாத்தியமான ஆற்றல் கொண்டவர்” என்றார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
புரொமோஷன் தவிர்ப்புக்கு காரணம்... யஷ்ஷின் 4 ஆண்டு தியாகம் - மனம் திறந்து பேசிய நயன்தாரா
PulseNews சுருக்கம்

கே.ஜி.எஃப் படங்களின் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நடிகர் யஷ், அடுத்து கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்சிக்’ படத்தில் நடித்துள்ளார். கியாரா அத்வானி, ஹூமா குரேஷி மற்றும் நயன்தாரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் இப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியாகவுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், பட விளம்பரங்களில் யஷ் ஏன் பங்கேற்கவில்லை என்பதற்கான காரணத்தை நயன்தாரா மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema