Nanjil Vijayan: மன அழுத்தம்.. மனைவியோடு பிரச்னை.. செய்தியாளர் சந்திப்பில் புலம்பிய நாஞ்சில் விஜயன்!

விரக்தி காரணமாகவே மனைவியை பிரிந்து விட்டேன் என சமூக வலைத்தளப் பதிவை வெளியிட்டதாக நகைச்சுவை கலைஞர் நாஞ்சில் சம்பத் விளக்கம் கொடுத்துள்ளார்.

நான் தோற்று விட்டேன்

நடிகர், நகைச்சுவை கலைஞர், பட்டிமன்ற பேச்சாளர் என பன்முக கொண்ட கலைஞரான நாஞ்சில் விஜயன் சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டு அதனை அடுத்த சில நிமிடங்களில் நீக்கி விட்டார். ஆனால் அதன் ஸ்கிரீன்ஷாட் வைரலாக பரவியது. அதாவது தனது தனிப்பட்ட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதை குறிப்பிட்டு அந்த பதிவு இருந்தது.

அதில், “நான் தோற்றுவிட்டேன், என் மனைவியை பிரிந்து தனிமையாக வந்துவிட்டேன். சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் பிக் பாஸ் என்கின்ற நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டும் என்பதற்காக உங்களோடு பழகிய நல்ல நட்பை கொச்சைப்படுத்தி என்னைப் பற்றி பல அவதூறுகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டிருந்தீர்கள். அதையெல்லாம் பெரிது படுத்தாமல் உங்கள் முன்பு நாங்கள் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று தொடர்ந்து பல வகையில் உழைத்துக் கொண்டிருந்தேன்.

உங்களையும் என்னையும் தொடர்பு படுத்தி பல அவதூறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் தினம் தினம் இன்று வரைக்கும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதை நினைத்து நான் ஒரு நாளும் வருந்தவில்லை. ஏனென்றால் என் மனைவி என்னோடு உறுதுணையாக இருக்கிறார் என்று.

ஆனால் இன்று என் வீட்டில் ஏற்பட்ட ஒரு சின்ன சண்டையின் போது என் மனைவியின் அம்மா வார்த்தையை விட்டுவிட்டார்கள். நீ ஒரு திருநங்கை ஏமாற்றிவிட்டு தானே என் பொண்ணை திருமனாம் செய்து கொண்டாய் என சொன்னார். இந்த சமூகத்தில் சில பேர் என்னை பல கேலி விமர்சனங்கள் செய்த போதும் என் குடும்பம் எனக்கு உறுதுணையாக இருக்கிறது என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்தேன் ஆனால் இன்று அந்த நம்பிக்கையும் வீண் போனது என் மனைவியை பிரிந்து தனிமையில் வந்து விட்டேன் நிச்சயமாக இந்த செய்தி உங்களுக்கு சந்தோசமாக இருக்கும் என நம்புகிறேன். திருநங்கை சாபம் சும்மா விடாது என சிலர் சொன்னது இன்று பழித்து விட்டது” என குறிப்பிட்டிருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானதால் உடனடியாக நாஞ்சில் விஜயன் அந்த பதிவை நீக்கி விட்டார்.

நாஞ்சில் விஜயனுக்கும் திருநங்கை வைஷ்ணவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே பிரச்னை இருந்து வருகிறது. இதனால் குடும்பத்திற்குள் பிரச்னை நிகழ்ந்து விட்டதாக இந்த பதிவு அமைந்தது.

என்னதான் நடந்தது?

இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “வாழ்க்கையில் எல்லாருக்கும் சின்ன சின்ன பிரச்னைகள் இருக்கும். நான் தனிமையில் வாழ்ந்த பையன். மன அழுத்தத்தில் வேறு என்ன பண்ண தோன்றும். சமூக வலைத்தளம் இருப்பதால் அந்த நேரத்தில் அந்த உணர்வை பதிவாக வெளியிட்டு விட்டேன். எனக்கு நெருக்கமானவர்கள் போன் செய்து இதெல்லாம் எதற்கு, பேசி தீர்க்க வேண்டிய பிரச்னையை ஊருக்கே தெரியப்படுத்தி இருக்க வேண்டாம் என சொன்னார்கள். வாழ்க்கையில் எல்லாருக்கும் பிரச்னை இருக்கும் என சொல்ல நான் நீக்கி விட்டேன். ஆனால் அதற்குள் அந்த பதிவு வைரலாகி விட்டது. நான் எதற்காக அந்த பதிவு போட்டேனோ, இப்போது இதை வைத்து திரும்ப சண்டை வந்து விட்டது” என தெரிவித்துள்ளார்.

தனது மன அழுத்தம் மற்றும் குடும்பப் பிரச்சனைகள் காரணமாகவே மனைவியைப் பிரிந்ததாக நகைச்சுவை கலைஞர் நாஞ்சில் விஜயன் செய்தியாளர் சந்திப்பில் வேதனை தெரிவித்துள்ளார். விரக்தியின் உச்சத்தில் சமூக வலைதளத்தில் தான் பதிவிட்ட கருத்துகள் தற்போது வைரலாகி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகளால் தான் தோல்வியடைந்து விட்டதாகக் குறிப்பிட்ட நாஞ்சில் விஜயன், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பின்னர் நீக்கிய கருத்துகள் குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். பன்முகத் திறமை கொண்ட கலைஞரான இவர், தனது குடும்பச் சூழல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.