PulseNews
சினிமா

'கடவுளே, எங்கள் வேதனையைக் குறைக்க முடியுமா?: நேபாள பேரிடர் குறித்து கண்ணீர் விட்ட நடிகை

நேபாள நாட்டில் சமீபத்தில் ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கு உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பேரழிவின் பாதிப்பில் இருந்து நேபாளம் இன்னும் மீள முடியாமல் தவித்து வருகிறது. இதனிடையே மூத்த நடிகை மனிஷா கொய்ராலா இந்த துயரச் சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: இது குறித்து பேசிய அவர், “மிகப் பிரம்மாண்டமான, வார்த்தைகளால் விளக்க முடியாத வலி” தன்னை ஆட்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டு, நேபாளம் இதுபோன்ற தொடர்ச்சியான இயற்கைப் பேரிடர்களில் இருந்து எப்போது விடுபடும் என்றும் வேதனையுடன் கேள்வி எழுப்பினார். மனிஷா கொய்ராலா நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மிகத் தலைவர் சத்குரு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்த இன் சொலிடர்டி வித் நேபாள் (“In Solidarity with Nepal”) என்ற நிகழ்ச்சியில் மனிஷா கொய்ராலா கலந்துகொண்டார். அப்போது அவர் உணர்ச்சிவசப்பட்டதுடன், இந்தப் பேரழிவிலிருந்தும் தனது நாடு மீண்டு வரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இன்று குருஜி என்னை அழைத்தபோது, எதையும் யோசிக்காமல் உடனே வந்துவிட்டேன். நாங்கள் தற்போது உணர்ந்து கொண்டிருப்பது மிகப் பிரம்மாண்டமான, வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு வலி. நான் இதுவரை இருந்ததைவிட மிகவும் பேச முடியாத நிலையில் இருக்கிறேன்; அதே நேரத்தில் மிகுந்த குழப்பத்திலும் இருக்கிறேன். இதை என்னால் எப்படிப் புரிந்துகொள்வது என்றே தெரியவில்லை. நமது நாடு ஏன் அடிக்கடி இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்கிறது? சில நேரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு குடும்பங்கள் அழிவைச் சந்திக்கின்றன. மற்ற நேரங்களில் இதுபோன்ற பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கு வந்து, ஆயிரக்கணக்கான மக்களை துயரத்தில் ஆழ்த்துகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது நான் சிந்துபால்சோக் பகுதிக்குச் சென்றேன். அங்கு இடிந்து விழுந்த வீடுகளையும், சிதைந்துபோன மக்களின் வாழ்க்கையையும் நேரில் பார்த்தேன். தற்போது ராசுவாவுக்குச் சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்க்கக்கூட எனக்கு தைரியம் இல்லை. இயற்கையோ அல்லது ஒருவேளை நம்முடைய செயல்களோ ஏன் மீண்டும் மீண்டும் இவ்வளவு வலியை நமக்கு ஏற்படுத்துகின்றன? இந்த வலியைக் கொஞ்சமாவது குறைக்க முடியாதா? கடவுளே, எங்களுக்கு சற்று குறைவான வலியையாவது கொடுக்க முடியாதா? எனது உணர்வுகளை எப்படி புரிந்துகொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த வாழ்க்கை இன்னும் எவ்வளவு வலியை நாம் தாங்கிக்கொள்ள வேண்டுமோ தெரியவில்லை. எனக்குத் தெரிந்த ஒரே விஷயம், நாம் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது அதைத் தாண்டி வருவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை என்பதுதான். நமது முழு பலத்தையும் திரட்டிக்கொண்டு, சிறிய சிறிய அடிகளாக முன்னோக்கிச் செல்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. அதைத்தான் நமது நாடும் செய்யும். அதைத்தான் நமது மக்களும் செய்வார்கள் என்று கூறியுள்ளார். இன்று மாலை (ஆகஸ்ட் 30) வெளியான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சுமார் 752 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 2,500 பேர் காணாமல் போயுள்ளனர். திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட மிகப்பெரிய பனிப்பாறை சரிவே இந்தப் பேரழிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பெருக்கெடுத்த வெள்ளநீர், வேகமாகப் பாயும் போதே கோஷி ஆறு மற்றும் அதன் துணை நதியான லெண்டே கோலா வழியாக திரிஷூலி ஆற்றில் கலந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பெரும் அழிவும் மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'கடவுளே, எங்கள் வேதனையைக் குறைக்க முடியுமா?: நேபாள பேரிடர் குறித்து கண்ணீர் விட்ட நடிகை
PulseNews சுருக்கம்

நேபாளத்தில் சமீபத்தில் நிகழ்ந்த கடுமையான வெள்ளப்பெருக்கு உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேரிடரின் பாதிப்பிலிருந்து அந்நாடு இன்னும் மீள முடியாமல் தவித்து வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து மூத்த நடிகை மனிஷா கொய்ராலா தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த துயரமான நிகழ்வு குறித்துப் பேசிய அவர், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய வலியை உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளார். கடவுளிடம் தங்களின் வேதனையைக் குறைக்க முடியுமா என அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema