Suriya: "அரிசி மூட்டை அளவு சிப்ஸ் பாக்கெட் சாப்பிட்டவன்தான் கார்த்தி.." மேடையிலே பகிர்ந்த அண்ணன் சூர்யா!

நடிகர் கார்த்தி நடிப்பில் சர்தார் 2 படம் வெளியாகிறது. வரும் செப்டம்பர் 10ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இ்தில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,

சர்தார்:

ஒரு நடிகரை விட கதாபாத்திரம் பெருசா பேசப்படுகிறது என்றால் அது ஒரு ஆசிர்வாதம். கார்த்தியைக் காட்டிலும் சர்தாரை பெரிதாக பேசுகிறார்கள் என்றால் கார்த்தி சர்தாராக நிற்க முடிகிறது, ஞாபகம் வைத்துக்கொண்டுள்ளனர் என்றால் அதை ஒரு நடிகனுக்கு ஆசிர்வாதமாக பார்க்கிறேன்.

கார்த்தி என்னைவிட முக்கியமான படங்கள் உன்னால் பண்ண முடிகிறது. இது ரொம்ப ரசிச்சும், ஆச்சரியமாகவும் அதை நான் பார்க்கிறேன். சர்தாரை மிகவும் முக்கியமான படமாக பார்க்கிறேன். சர்தார் திரையரங்கில் கொண்டாட்டமாக இருக்கப்போகிறது.

சினிமா பத்தி ஆழமா யோசிக்கும் நபர்:

நான் சென்னைதான். நான் வந்து வந்து எல்லாம் போகல. நான் இங்கதான் இருக்கேன். நிறைய பேருக்கு அந்த குழப்பம் இருக்கிறது. அங்கதான் போயிட்டு போயிட்டு வர்றேன். எங்க அப்பாவோட அந்தஸ்தை நான் எடுத்துக்குறேன். ஒரு அண்ணனாக பார்ப்பதை விட அப்பா ஸ்தானத்தில் பார்க்கிறேன். என்கிட்டயே நிறைய பேர் சொல்லியிருக்காங்க.

உங்க தம்பியோட மிகப்பெரிய ரசிகன் சார் நான். எனக்கு தான் கை கொடுக்க வர்றாங்கனு நினைச்சா, உங்க தம்பியாேட பெரிய ரசிகர் சார் நான். உங்க தம்பிகிட்ட சொல்லிருங்க சார். என்னைப் பத்தி கேக்கவே மாட்டாங்க. என்கிட்டயே கார்த்தி பத்தி மட்டும் பேசிட்டு போயிடுவாங்க. என்னை விட ஆழமா இன்னும் சினிமா பத்தி அதிகமா நினைக்குறது கார்த்தி.

பருத்திவீரன்:

அவங்க அன்பை புரிந்துகொண்டு சினிமாவுக்கு உண்மையா இருக்குறதைப் பத்தி தினம், தினம் யோசிப்பான். எவ்ளோ உண்மையா இருப்பேனோ அவ்ளோ உண்மையா ஒரு நடிகராக அதிகமாக என்னைவிட நினைக்குறது கார்த்தி.

பாத்து வாயைப் பிளந்தது பருத்திவீரன்தான். அவன் அமெரிக்கா போயிட்டு வரும்போது அரிசி மூட்டை அளவுல சிப்ஸ் பாக்கெட் கிடைக்கும். அரிசி மூட்டை அளவு சிப்ஸ் பாக்கெட் சாப்பிட்ட ஆளு அவன். பருத்திவீரன்காக மொத்தமாக ஆளு மாறி, உருண்டு, பிரண்டு சண்டை போட்டதா பாக்கும்போது அந்த மாற்றம். ஒரு வாய்ப்பு கிடைச்சது அதை மிஸ் பண்ணிடவே கூடாதுனு கூட இருந்து பாத்து, வியந்த படம் பருத்திவீரன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் சினிமாவில் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கொண்ட நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் வாரிசுகளான கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகர்களாக உலா வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சர்தார் 2' திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் சூர்யா தனது தம்பியின் நடிப்பு குறித்துப் பெருமிதத்துடன் பேசினார்.
ஒரு நடிகரை விட, அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் மக்களிடையே பெரிய அளவில் பேசப்படுவது ஒரு வரம் என்று சூர்யா குறிப்பிட்டார். கார்த்தியை விட 'சர்தார்' கதாபாத்திரம் அதிகமாகப் பேசப்படுவதாகவும், அந்த கதாபாத்திரமாகவே கார்த்தி மாறியிருப்பதாகவும் அவர் மேடையில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், கார்த்தியின் சிறு வயது உணவுப் பழக்கம் குறித்தும் சூர்யா வேடிக்கையாகப் பகிர்ந்து கொண்டார்.