“சூர்யாவின் தனித்துவம்... மமிதாவின் நடிப்பு...” - ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்துக்கு கார்த்தி ரிவ்யூ
வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நாக வம்சி தயாரித்திருக்க மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. எமோஷன் நிறைந்த குடும்ப பின்னணியில் வெளியாகியுள்ள இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்று காலை முதலே சூர்யா ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று வருகின்றனர். வழக்கம் போல் பேனர், பட்டாசு, மோளம் என முதல் நாள் முதல் காட்சியை கொண்டாட்டத்துடன் வரவேற்றனர். இந்த நிலையில் இப்படத்திற்கு கார்த்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வெங்கி அட்லூரி என்னவொரு ரைட்டிங். அழகான கதாபாத்திரங்கள், மிகச்சிறப்பான நடிப்பு. முழுப் படமும் முகத்தில் புன்னகையுடனும் மனதை அன்பாலும் நிரப்புகிறது. மீண்டும் ஒருமுறை பார்க்க ஆசைப்படுகிறேன். இப்படத்தை தயாரித்ததற்காக வம்சிக்கு வாழ்த்துக்கள். சூர்யா... நீங்கள் தனித்துவமானவர், உண்மையிலேயே அற்புதமான நடிப்பு! மமிதா பைஜூ... உற்சாகம் ததும்பும் உங்களது நடிப்பு மிக அருமை, ராதிகா... எவ்வளவு நெகிழ்ச்சியான நடிப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார். #VenkyAtluri what writing man...!! Beautiful characters and stunning performances!! A wholesome film that keeps you smiling throughout and fills your heart with love!! Would love to watch it again....Many Congratulations @vamsi84 for #VishwanathAndSons !! @Suriya_offl your Class... pic.twitter.com/4i8LDV3nlg — Karthi (@Karthi_Offl) August 14, 2026

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் நாக வம்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எமோஷன் நிறைந்த குடும்ப கதையம்சம் கொண்ட இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்று காலை முதலே சூர்யாவின் ரசிகர்கள் பேனர்கள் மற்றும் பட்டாசுகள் முழங்க உற்சாகத்துடன் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர். மேலும், படத்தின் தனித்துவமான திரைக்கதை மற்றும் மமிதாவின் நடிப்பை நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார்.