'வதந்திகளை நம்பாதீங்க': உடல்நலம் குறித்து வீடியோ வெளியிட்ட செஃப் தாமு
பிரபல சமையல் கலைஞரும், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் நடுவருமான செஃப் தாமு, தன் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்ற வெளியிட்டுள்ளார். சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் அரையிறுதி சுற்றில் அவர் கலந்து கொள்ளாததை தொடர்ந்து, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானதாக தவறான வதந்திகள் பரவத் தொடங்கின. View this post on Instagram "செஃப் தாமு கேட்டரர்ஸ் (Chef Dhamu Caterers) நடத்தும் சமையல் வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் புதிய வகுப்புகள் மீண்டும் தொடங்குகின்றன. ஒரு நாளைக்கு 3 உணவுகள் வீதம் 5 நாட்களில் 15 சமையல் முறைகள் கற்றுத் தரப்படும். விருப்பமுள்ள மாணவர்கள் இதில் பதிவு செய்து கொள்ளலாம். 'குக் வித் கோமாளி' செஃப் தாமு திடீர் மரணமடைந்தார் என அண்மையில் பரவிய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இறைவன் அருளால் நான் மிகவும் ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருக்கிறேன். என்னை பிடிக்காத சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். காலில் ஊசி போட்டதால் ஏற்பட்ட வலி காரணமாகவே அரையிறுதி சுற்றில் பங்கேற்க முடியவில்லை. இறுதிப் போட்டியில் நிச்சயம் பங்கேற்பேன்" இவ்வாறு செஃப் தாமு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் நடுவரான செஃப் தாமு, தனது உடல்நலம் மற்றும் இறப்பு குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் அரையிறுதிச் சுற்றில் செஃப் தாமு பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் காலமானதாக தவறான தகவல்கள் இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.