பாட்டி வீட்டில் தஞ்சம் புகுந்த கார்த்திக் - ரேவதி; எரிமலையாய் வெடிக்கும் சாமுண்டீஸ்வரி: கார்த்தகை தீபம் அப்டேட்
பரமேஸ்வரி பாட்டி வீட்டில் என்ட்ரி கொடுத்த கார்த்திக் - ரேவதி! ஆவேசத்தில் வெடித்த சாமுண்டீஸ்வரி.. இன்று செம பரபரப்பு - கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட் கார்த்திகை தீபம் சீரியலில், உணர்ச்சிகளும் பரபரப்பும் கலந்த காட்சிகளுடன் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்க உள்ளது. நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு கிளம்பிய நிலையில், இன்று அவர்களின் வருகை பல புதிய திருப்பங்களுக்கு வழிவகுக்கிறது. அதாவது, சாமுண்டீஸ்வரி வீட்டில் கடும் ஆத்திரத்தில் கொந்தளிக்கிறாள். கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்து உடைத்து ஆவேசப்படுகிறாள். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தாலும், சாமுண்டீஸ்வரியின் கோபம் மட்டும் குறையவே இல்லை.மறுபக்கம், கார்த்திக் மற்றும் ரேவதி ஜோடியாக பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களை பார்த்த மகிழ்ச்சியில் பரமேஸ்வரி ஆரத்தி எடுத்து அன்புடன் வீட்டிற்குள் வரவேற்கிறார். அதோடு மட்டுமல்லாமல், ரேவதியை நேராக பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்றச் சொல்கிறார். ரேவதியும் பக்தியுடன் விளக்கேற்றி அனைவரின் மனதையும் கவர்கிறாள். இந்த நிகழ்வுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, சாமுண்டீஸ்வரி இன்னும் கோபத்தின் உச்சத்திலேயே இருக்கிறாள். அப்போது மயில்வாகனம் மற்றும் ரோகினி இருவரும் பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு வந்து கார்த்திக், ரேவதியை சந்திக்கின்றனர். இதனால் அங்கு புதிய பேச்சுகளும் எதிர்பாராத சம்பவங்களும் அரங்கேறப் போகும் சூழல் உருவாகிறது. சாமுண்டீஸ்வரியின் கோபம் அடுத்து என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது? பரமேஸ்வரி வீட்டில் கார்த்திக் - ரேவதிக்கு என்ன காத்திருக்கிறது? மயில்வாகனம் மற்றும் ரோகினியின் வருகை எந்த புதிய திருப்பத்தை உருவாக்கும்? என்று பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திவ்யாவை வைத்து மகாவை விரட்ட காய் நகர்த்தும் கவிதா... சிக்கப்போவது மகாவா? அதிரடியில் திருமாங்கல்யம்! திருமாங்கல்யம், சீரியலின் நேற்றைய எபிசோடில் திவ்யா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ரெசார்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், இன்று கதையில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேற உள்ளன. இன்றைய எபிசோடில், திவ்யாவை ரெசார்ட்டுக்கு அழைத்து சென்ற விஷயம் கௌதமுக்கு தெரிய வருகிறது. இதையடுத்து, அவர் நேராக அவர்கள் தங்கியிருக்கும் ரெசார்ட்டுக்கு வந்து சேருகிறார். வந்தவுடன், "நீ சொன்ன மாதிரியே ரெசார்ட்டுக்கு வந்துட்டேன்" என்று கவிதாவுக்கு தகவல் தெரிவிக்கிறார். மறுபக்கம், திருவும் மகாவும் திவ்யாவை அறைக்கு அழைத்து சென்று ஓய்வெடுக்க வைக்கின்றனர். அப்போது திவ்யாவை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மகா, "நீங்க போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, நான் அக்காவை பார்த்துக்கிறேன்" என்று திருவிடம் கூறுகிறாள். அதன்பிறகு, திரு தேநீர் குடித்துவிட்டு ஓய்வெடுக்க சென்றுவிடுகிறார். திவ்யாவை தூங்க வைத்த மகா கீழே வந்து தனியாக அமர்ந்திருக்கும் நேரத்தில், கௌதமின் திட்டம் செயல்பட தொடங்குகிறது. அவர் ஏற்பாடு செய்த நபர், தேநீரில் மயக்க மருந்து கலந்து மகாவிடம் கொடுக்கிறார். எதுவும் அறியாத மகா அந்த தேநீரை குடித்தவுடன் மெல்ல மெல்ல மயக்கமடைகிறாள். அப்போது தான் கவிதாவின் உண்மையான சூழ்ச்சி வெளிச்சத்திற்கு வருகிறது. திவ்யாவை பயன்படுத்தி, மகாவை வீட்டை விட்டு விரட்டும் வகையில் ஒரு பெரிய திட்டத்தை கவிதா தீட்டி இருப்பது தெரிய வருகிறது. மயக்க நிலையில் இருக்கும் மகாவுக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது? கவிதாவின் திட்டம் வெற்றிபெறுமா? இல்லையா மகா இந்த சூழ்ச்சியில் இருந்து தப்பித்து உண்மையை வெளிக்கொண்டு வருவாளா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, பாண்டியை காப்பாற்றிய வாசுதேவன்.. அப்பத்தாவால் அதிர்ச்சியான குடும்பம்.. வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்! வாகை சூடவா சீரியலில் பாண்டியை காப்பாற்றும் வாசுதேவன், அப்பத்தாவின் மர்மமான பேச்சு, குடும்பத்தினரின் சந்தேகம் என இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக நகரவுள்ளது. ஸ்டேஷனில் பதற்றமான சூழல் நிலவிக் கொண்டிருக்கும்போது, திடீரென என்ட்ரி கொடுக்கும் வாசுதேவன் போலீஸாரிடம் பேசி பாண்டியை வெளியே கொண்டு வருகிறார். அதன்பிறகு அப்பத்தாவிடம், “நான் கொடுத்தது கள்ளப்பணம் இல்லை. உங்க வீட்டில் இருக்கும் யாரோ ஒருத்தர் தான் இதற்குப் பின்னால் இருக்கணும். உண்மையை கண்டுபிடிங்க” என்று கூறி அதிர்ச்சி கொடுக்கிறார். இதற்கிடையே ஜீவாவும் மீனாட்சியும் ஸ்டேஷனுக்கு வர, வாசுதேவனை பார்த்துவிடுவார்களா என்ற எதிர்பார்ப்பு உருவாகிறது. ஆனால் கடைசி நேரத்தில் அவரை பார்க்காமல் தவறவிடுவது காட்சிக்கு மேலும் பரபரப்பு சேர்க்கிறது. பிறகு அப்பத்தாவை சந்திக்கும் ஜீவா மற்றும் மீனாட்சி, “என்ன ஆச்சு?” என்று கேட்க, “பாண்டியை ரிலீஸ் பண்ணிட்டாங்க” என்று அப்பத்தா தெரிவிக்கிறார். “அது எப்படி சாத்தியமாச்சு?” என்ற கேள்விக்கு அவர் சாதுர்யமாக பதிலளித்து சமாளிக்கிறார். மறுபக்கம் பாண்டி வீடு திரும்பியதும் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால் உடனே அப்பத்தா “பணத்தை எடுத்தது யார்?” என்று கேள்வி எழுப்ப, மனோ உண்மையை உளறிவிடுவானோ என்ற பதற்றம் உருவாகிறது. அதேசமயம் ஜீவா சரியான நேரத்தில் தலையிட்டு மனோவை அமைதிப்படுத்தி உண்மை வெளிவராமல் தடுத்து விடுகிறார். இதனால் பிரச்சனை முடிந்துவிட்டது என்று நினைக்கும் நேரத்தில், அப்பத்தாவிடம் இவ்வளவு பெரிய தொகை பணம் எப்படி வந்தது என்ற புதிய சந்தேகம் குடும்பத்தினருக்கு எழுகிறது. குறிப்பாக மீனாட்சி நேரடியாக கேள்வி கேட்க, “அது என்னோட பணம்தான்” என்று அப்பத்தா கூறி சமாளிக்கிறார். ஆனால் அவரது பதில் அனைவரின் சந்தேகத்தையும் மேலும் அதிகரிக்கிறது. வாசுதேவன் சொன்ன உண்மையின் பின்னணி என்ன? கள்ளப்பண விவகாரத்தில் சிக்கப் போவது யார்? அப்பத்தாவின் ரகசியம் வெளிவருமா?* என்ற பல கேள்விகளுடன் இன்றைய வாகை சூடவா எபிசோட் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை தீபம் சீரியலில், கார்த்திக்கும் ரேவதியும் பரமேஸ்வரி பாட்டியின் வீட்டிற்குச் சென்று தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களின் இந்த வருகை அந்த வீட்டில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வால் சாமுண்டீஸ்வரி மிகுந்த ஆத்திரமடைந்து கடும் கோபத்தில் கொந்தளிக்கிறார். விறுவிறுப்பான காட்சிகளுடன் இன்றைய எபிசோட் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் அமையவுள்ளது.