இன்ஸ்டா பழக்கம்.. சிறுமியை கடத்திச் சென்று போக்ஸோவில் சிக்கிய 19 வயது காதலன்.!
ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் தமிழ்நாடு காவல்துறையினரால் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார். சிறுமி: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி, பன்னிரண்டாம் வகுப்பு பயின்று முடித்துள்ளார். இவர் பொறியியல் கல்லூரியில் சேருவதற்காக கலந்தாய்வுக்கு காத்திருந்துள்ளார். இவர் கடந்த 17 ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், பின் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதையும் படிங்க: 7 பேரால் 13 வயது சிறுமி பலாத்காரம்.. சகோதரர், காதலன் என பீர் குடிக்கவைத்து நேர்ந்த கொடுமை.. சேலத்தில் பேரதிர்ச்சி.! மாயம்: இதனால் பதறிப்போன குடும்பத்தினர் சிறுமியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின் சிறுமி மாயமானது தொடர்பாக சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் நடந்த விசாரணையில், சிறுமி பெங்களூர் சென்றுள்ளது தெரியவந்தது. காதல்: அதாவது, சிறுமியை ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூரைச் சேர்ந்த கஜேந்திரன் (வயது 19) என்பவர் பெங்களூருக்கு கடத்திச் சென்றது உறுதி செய்யப்பட்டது. சிறுமியின் இருப்பிடத்தை கண்டறிந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு இளைஞரை கைது செய்தனர். விசாரணையில், இருவருக்கும் இன்ஸ்டாகிராமில் பழகி காதலித்து வந்தது தெரியவந்தது. திருமண ஆசை: சம்பவத்தன்று சிறுமியை நேரில் பார்க்க வந்த கஜேந்திரன், திருமணம் செய்யலாம் என ஆசைவார்த்தை கூறி பெங்களூருக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். அங்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதும் உறுதியானது. இதனையடுத்து, கஜேந்திரனை போக்ஸோவில் கைது செய்த அதிகாரிகள், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதையும் படிங்க: இன்ஸ்டா கள்ளகாதலால் விபரீதம்.. பெண் நள்ளிரவில் வீடுபுகுந்து எரித்துக்கொலை.. ஈரோட்டில் திக் திக் சம்பவம்.!

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர், சேலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்காகக் காத்திருந்த அந்தச் சிறுமி, கடந்த 17-ம் தேதி முதல் காணாமல் போயிருந்தார். தற்போது அவர் கடத்தப்பட்டதை உறுதி செய்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் அந்த இளைஞரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.