PulseNews
சினிமா

ஷாக் நியூஷ்.... மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 ரத்து? அதிகாரிகளிடம் அல்லேலப்படும் இல்லத்தரசிகள்!!!

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான ரூ.1,000 உரிமைத் தொகை கிடைக்கவில்லை என பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பணம் வரவு வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்கள் குழப்பத்தில் உள்ளனர். 5,000-க்கும் மேற்பட்டோருக்கு தொகை வரவில்லை வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை என பயனாளிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக குறிப்பிட்ட காலத்தில் கிடைத்து வந்த ரூ.1,000 தொகை, தொடர்ந்து இரண்டு மாதங்களாக வராததால் அவர்கள் அதிகாரிகளை அணுகி விளக்கம் கேட்டுள்ளனர். இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ 1,000 இனி இவர்களுக்கு கிடையாது! தமிழக அரசின் அதிரடி...!!! அதிகாரிகளிடம் முறையிட்ட பிறகே தகவல் பயனாளிகள் நேரில் சென்று புகார் அளித்த பிறகுதான், சிலரது கணக்குகளில் தொகை வரவு வைக்கப்படாதது குறித்து தங்களுக்கு தெரியவந்ததாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக சென்னை தலைமையகத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் பயனாளிகள் தெரிவிக்கின்றனர். இதனால், உள்ளூர் அளவில் புகார் தெரிவித்தும் உரிய விளக்கம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறா? நிர்வாகத் தாமதமா? தொகை வரவு வைக்கப்படாததற்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமா அல்லது நிர்வாக ரீதியான தாமதமா என்பது குறித்து பயனாளிகளிடையே கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே, உங்கள் வங்கிக் கணக்கிலும் இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையும் படிங்க: ஷாக் நியூஷ்...மகளிர் உரிமைத் தொகை.... தவெக அரசின் அதிரடி நடவடிக்கை! விரிவாக்கத்துக்கு முன் களையெடுப்பு..!!!

Tamil Spark15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஷாக் நியூஷ்.... மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 ரத்து? அதிகாரிகளிடம் அல்லேலப்படும் இல்லத்தரசிகள்!!!
PulseNews சுருக்கம்

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ. 1,000 உதவித்தொகை, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தங்களுக்கு வரவில்லை எனப் பயனாளிகள் புகார் அளித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் 5,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இந்தத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தங்களுக்குத் தொடர்ந்து நிதி உதவி கிடைக்காததால், சம்பந்தப்பட்ட பெண்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து விளக்கம் கோரி, அவர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர்.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema