தயாரிப்பாளர் பையன்னா கௌம்பி வந்துடுவியா? ஜீவா முதல் படத்தில் பச்சையாக கேட்ட நாசர்
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பல கேரக்டர்களில் நடித்து அசத்தியுள்ள நடிகர் நாசர் நடிகர் ஜீவா ஹீரோவாக அறிமுகமான முதல் படத்தில் அவரை கடுமையாக விமர்சித்து அவர் முகத்திற்கு நேராகவே பச்சையாக கேட்டார் என்று ஜீவா கூறியுள்ளார். பெரும்புள்ளி, சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஜீவா, கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து தித்திக்குதே, ராம், கற்றது தமிழ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு இவர் நடிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது ஜாலியாக இருந்த ஒருத்தன் என்ற படத்தில் நடித்து வரும் ஜீவா, அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட் ஆகி வரும் நிலையில், இவரின் முதல் படம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ரவி மரியா இயக்கத்தில் வெளியான ஆசை ஆசையாய் படத்தில், விஜயகுமார், நாசர், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தனது காதலனை தொழில் அதிபராக மாற்றும் காதலியின் கதையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படம் குறித்து பேசிய ஜீவா, நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது அனைவரும் என்னிடம் நன்றாக பேசினார்கள். ஆனால், நாசர் சார் பேசவே மாட்டார். காலையில் வந்தவுடன், இன்னைக்கு என்ன சார் பெரிய டைலாக் இருக்கா உங்களுக்கு என்று கேட்பேன். அப்போது அவர் எதுவுமே பேசமாட்டார். ஒருநாள் என்னை அழைத்து என்ன தம்பி அடுத்து வரும் சீனுக்கு ப்ரிப்பேர் பண்ணிட்டீயா என்று கேட்டார். நான் இல்லை சார், இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே ப்ராம்ட் பண்ணி சொல்லிடுவேன் என்று சொன்னேன். நான் சொன்னதை கேட்ட அவர், நடிகர் ஆகணும்னா அப்படியே கௌம்பி நேர வந்துடுவீங்களாப்பா என்று கேட்டார். இன்னும் சொல்லப்போனால், தயாரிப்பாளர் பையன்னா கௌம்பி வந்துருவீங்களாடா என்று பச்சையா கேட்டார் என்று சிரித்துக்கொண்டே ஜீவா கூறியுள்ளார்.

நடிகர் ஜீவா கதாநாயகனாக அறிமுகமான தனது முதல் படமான ‘ஆசை ஆசையாய்’ படப்பிடிப்பின் போது, நடிகர் நாசர் தன்னை கடுமையாக விமர்சித்து நேருக்கு நேராக சில கேள்விகளை எழுப்பியதாக ஜீவா தெரிவித்துள்ளார். அப்போது நாசர், "தயாரிப்பாளர் பையன் என்பதால் மட்டும் நீ நடித்துவிடுவியா?" என்பது போன்ற கருத்துகளை வெளிப்படையாகக் கேட்டு தன்னை விமர்சித்ததாக அவர் கூறியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாகப் பல படங்களில் நடித்திருந்த ஜீவா, கடந்த 2003-ம் ஆண்டு வெளியான 'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தித்திக்குதே, ராம் மற்றும் கற்றது தமிழ் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.