PulseNews
சினிமா

“நாட்டாமை குடும்பம்” - பச்சை குத்திக் கொள்ள நடிகர் சரத்குமார் அறிவுறுத்தல்!

நடிகர் சரத்குமாரின் பிறந்தநாள் விழாவைச் சிறப்பாக நடத்திய அவரது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நாட்டாமை குடும்பம் எனப் பச்சை குத்திக் கொள்வது நமது அடையாளம். எனது சிந்தனையில் திடீரென தோன்றியதுதான் இந்த பச்சை குத்தும் எண்ணம். நமது குடும்ப அடையாளமாகப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நான் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. ‘நாட்டாமை குடும்பம்’ எனப் பச்சை குத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அனைவரும் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என நான் வற்புறுத்தவில்லை. விரும்புபவர்கள் பச்சை குத்திக் கொள்ளலாம். நமது குடும்பத்தில் உள்ளவர்கள் என்னைச் சந்திக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு கிரீன் கார்டு போன்ற ஒன்றை வழங்கலாம் என நினைத்தேன். ஆனால், பச்சை குத்திக் கொண்டால், அவர்கள் நமது குடும்பம் என்று ஆகிவிடும். கையில் பச்சை இருந்தால் என்னை எளிதாக நேரடியாகச் சந்திக்கலாம்” என்று சரத்குமார் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், சரத்குமாரின் முன்னிலையில் அவரது ஆதரவாளர்கள் பலரும் “நாட்டாமை குடும்பம்” எனக் கையில் பச்சை குத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“நாட்டாமை குடும்பம்” - பச்சை குத்திக் கொள்ள நடிகர் சரத்குமார் அறிவுறுத்தல்!
PulseNews சுருக்கம்

எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற தனது பிறந்தநாள் ஆதரவாளர்கள் நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகர் சரத்குமார் கலந்துகொண்டார். அப்போது, தனது குடும்பத்தின் அடையாளமாக 'நாட்டாமை குடும்பம்' என்று கையில் பச்சை குத்திக் கொள்ளுமாறு அவர் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இது கட்டாயமல்ல, விருப்பமுள்ளவர்கள் மட்டுமே குத்திக்கொள்ளலாம் என்று அவர் விளக்கினார். பச்சை குத்திக் கொள்பவர்களைத் தனது குடும்பமாகவே கருதுவதாகவும், அதன் மூலம் தன்னை எளிதாகச் சந்திக்க முடியும் என்றும் கூறியதை அடுத்து, பல ஆதரவாளர்கள் அவ்வாறே பச்சை குத்திக்கொண்டனர்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema