PulseNews
சினிமா

“இயக்குநராக இல்லாமல் ரசிகன் போல்...” - வெங்கி அட்லூரி பகிர்ந்த தியேட்டர் அனுபவம்

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நாக வம்சி தயாரித்திருக்க மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் இன்று(ஆகஸ்ட் 14) வெளியாகியுள்ளது. எமோஷன் நிறைந்த குடும்ப பின்னணியில் வெளியாகியுள்ள இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதாவது முதல் பாதி நன்றாக இருப்பதாகவும் இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக செல்வதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர். இதனிடையே சூர்யா ரசிகர்கள் வழக்கம் போல் பேனர், பட்டாசு, மோள என படத்தை உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிலையில் இயக்குநர் வெங்கி அட்லூரி சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மிகவும் மன நிறைவாக இருக்கிறது. ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்த்து கொண்டாடுகின்றனர். நானும் சூர்யா ரசிகன் என்பதால் கொண்டாடுகிறேன். ஒரு இயக்குநராக இல்லாமல் ரசிகனாகத்தான் படம் பார்த்தேன்” என்றார். தொடர்ந்து சூர்யா குறித்து பேசிய அவர், “சூர்யா சாரின் ஒழுக்கம் வேற லெவல். அவர் எது செய்தாலும் அதை ரசிப்பேன். ஏனென்றால் நான் ஏற்கனவே சொன்னது போல அவருடைய ரசிகன்” என்றார். நேற்று படம் வெற்றி பெற திருப்பதி கோயிலில் மொட்டை போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nakkheeran16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“இயக்குநராக இல்லாமல் ரசிகன் போல்...” - வெங்கி அட்லூரி பகிர்ந்த தியேட்டர் அனுபவம்
PulseNews சுருக்கம்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 14) வெளியாகியுள்ளது. நாக வம்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எமோஷன் நிறைந்த குடும்பக் கதையாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் முதல் பாதி சிறப்பாக அமைந்துள்ளதாகவும், இரண்டாம் பாதி சற்று மெதுவாக நகர்வதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு இயக்குநராக அல்லாமல் ரசிகராகத் தியேட்டரில் படம் பார்த்த அனுபவத்தை வெங்கி அட்லூரி பகிர்ந்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema