டாக்ஸிக் படம் வெற்றி பெற வேண்டி, மொட்டி அடித்தாரா நயன்தாரா? இணையத்தில் பரவும் போட்டோக்கள்: உண்மை என்ன?
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை நயன்தாரா, தற்போது தான் நடித்துள்ள டாக்ஸிக் படம் வெற்றி பெற வேண்டும் என்று திருப்பதியில் மொட்டை அடித்துக்கொண்டதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களின் உண்மை நிலவரம் என்ன என்பது குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர் கன்னட நடிகர் யாஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது யஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நயன்தாரா பேசியது இணையத்தில் வைரலாக பரவியது. டாக்ஸிக் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், ரிலீஸ்க்கு முன்னதாக, நடிகை நயன்தாரா திருப்பதி திருமலை கோயிலுக்கு சென்று தலைமுடியை மொட்டை அடித்துக் கொண்டதாகக் கூறி செய்திகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாரம்பரியமாக செய்யும் நேர்த்திக்கடனின் ஒரு பகுதியாக நயன்தாராவும் தனது தலைமுடி முழுவதையும் மொட்டை அடித்துக் கொண்டதாகக் கூறி எக்ஸ் (ட்விட்டர்), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. மொட்டை அடித்த தோற்றத்தில் நயன்தாரா நிற்கும் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்களும் திரையுலகினரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், இதன் பின்னணியில் உள்ள உண்மை வேறாக உள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படங்கள் முற்றிலும் போலியானவை என்றும், அவை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டவை என்றும் உண்மைச் சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது. Nayanthara🤯🤯 pic.twitter.com/AuJUurZLrt — sabas csk (@saba9361) August 16, 2026 நயன்தாராவின் இந்தத் திருப்பதி பயணம் கூட புதிதல்ல. கடந்த ஏப்ரல் மாதம் தனது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படங்களையே தற்போது தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்தப் புகைப்படங்களில் நயன்தாராவின் தோற்றத்தில் மாற்றம் செய்துள்ளனர். #Nayanthara & #VigneshShivan visit Tirumala to seek the blessings of Lord Venkateshwara 🙏✨ pic.twitter.com/xwJU0ZDszo — Jitendra (@Jitendra_9012) April 9, 2026 உண்மையான புகைப்படங்களையும் தற்போது பரவி வரும் புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோதுதான் ஏ.ஐ மூலம் செய்யப்பட்ட மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் நயன்தாரா அணிந்திருந்த அதே ஆடை மற்றும் நகைகளே தற்போது வைரலாகும் புகைப்படங்களிலும் இடம்பெற்றுள்ளன. ஆனால், ஏ,ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரது தலைமுடியை மட்டும் டிஜிட்டல் முறையில் அகற்றி, மொட்டை அடித்தது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். உண்மையான புகைப்படங்களில் நயன்தாராவின் தலைமுடி தெளிவாகக் காணப்படுகிறது. இதற்கிடையில், பிரபல இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்காக நயன்தாரா காத்திருக்கிறார். கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, தான் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருப்பதியில் மொட்டை அடித்துக் கொண்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இப்படம் குறித்து நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கன்னட நடிகர் யாஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.