PulseNews
சினிமா

அன்றும்... இன்றும்... 8 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாரை நெகிழ வைத்த நிகழ்வு!

இயக்குநர் மற்றும் நடிகரான சசிகுமார் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் அவ்வபோது கலந்து கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் 2018ஆம் ஆண்டு கொடைக்கானல் ஏரி நகராட்சி பூங்காவில் மரம் நடும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவரும் ஒரு மரக்கன்று நட்டார். அது தற்போது பெரிய மரமாக வளர்ந்துள்ளது. அதனை தற்போது பார்வையிட்டு பூரிப்படைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “2018-ஆம் ஆண்டு, கொடைக்கானல் ஏரி நகராட்சி பூங்காவில் ஒரு சிறிய ருத்ராட்ச மரக்கன்றை நட்டேன். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2026-ஆம் ஆண்டு அதே இடத்திற்கு மீண்டும் சென்றபோது, அந்த சிறிய மரக்கன்று வளர்ந்து அழகான ருத்ராட்ச மரமாக நிமிர்ந்து நிற்பதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். சில தருணங்கள் நம்மை இயற்கையுடனும், நினைவுகளுடனும், காலத்தின் பயணத்துடனும் ஆழமாக இணைத்துவிடுகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார். திரைப்பாம் பொறுத்தவரை சசிகுமார் கடைசியாக ராஜு முருகன் இயக்கத்தில் ‘மை லார்ட்’ படத்தில் நடித்திருந்தார். பின்பு வெப் தொடரில் முதல் முறையாக ‘வதந்தி 2’ தொடரில் நடித்த நிலையில் அது சமீபத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 2018-ஆம் ஆண்டு, கொடைக்கானல் ஏரி நகராட்சி பூங்காவில் ஒரு சிறிய ருத்ராட்ச மரக்கன்றை நட்டேன். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2026-ஆம் ஆண்டு அதே இடத்திற்கு மீண்டும் சென்றபோது, அந்த சிறிய மரக்கன்று வளர்ந்து அழகான ருத்ராட்ச மரமாக நிமிர்ந்து நிற்பதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.... pic.twitter.com/iBAD06menX — M.Sasikumar (@SasikumarDir) August 20, 2026

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அன்றும்... இன்றும்... 8 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாரை நெகிழ வைத்த நிகழ்வு!
PulseNews சுருக்கம்

இயக்குநரும் நடிகருமான சசிகுமார், கடந்த 2018-ஆம் ஆண்டு கொடைக்கானல் ஏரி நகராட்சி பூங்காவில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்த நிகழ்வின்போது அவர் ஒரு மரக்கன்றை நட்டு வைத்தார்.

தற்போது அந்த மரம் நன்கு வளர்ந்து பெரிய மரமாக மாறியுள்ளதைக் கண்டு சசிகுமார் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்த மரத்தைப் பார்வையிட்ட அவர், இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema