“வலிமையுடன் திரும்பி வருவேன்” - காயம் குறித்து அருண் விஜய்!
அருண் விஜய் நடிப்பில் இந்தாண்டு இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் ‘ரெட்ட தல’ படம் வெளியானது. ஆனால் இப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இப்படத்தை அடுத்து தற்போது முத்தையா இயக்கத்தில் ‘இருளன்’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். நேதாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் சண்முகவேல் பாண்டியன் இப்படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் ஆதிகாலத்து கெட்டப்பில் தோன்றியிருந்தார் அருண் விஜய். இப்படம் போர்குடி காவல் இனத்தின் வீர வரலாறு என்ற டேக் லைனுடன் உருவாகிறது. இதனால் பீரியட் டிராமா ஜானரில் படம் உருவாகிறது. நாயகியாக மிர்னா மற்றும் முக்கிய பாத்திரன்க்களில் சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் நடிக்கின்றனர். படப்பிடிப்பு திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அருண் விஜய்யே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்திருந்ததாவது, “காயம் காரணமாக வழக்கமான பயிற்சி முறையைத் தவிர்க்க நேரிடுவது மிகவும் வருத்தமளிக்கிறது. இருளன் படப்பிடிப்பின் போது எனது தொடையின் தசை கிழிந்துவிட்டது. இப்போது அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறேன். இதெல்லாம் விளையாட்டின் ஒரு பகுதிதான். இன்னும் வலிமையுடன் திரும்பி வருவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு இதுவரை எந்தப் படமும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான ‘ரெட்ட தல’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
தற்போது முத்தையா இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகும் ‘இருளன்’ திரைப்படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். நேதாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் சண்முகவேல் பாண்டியன் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், அதில் அருண் விஜய் ஆதிகாலத்து தோற்றத்தில் காணப்பட்டார்.