PulseNews
சினிமா

பெரிய ஆள வர வேண்டியவர், அவர் மரணத்திற்கு நானே காரணமாகி விட்டேன்: பிரபல நடிகர் பற்றி மனம் உருகிய வையாபுரி

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருந்த நடிகர் வையாபுரி, ஒரு நடிகனின் மரணத்திற்கு நான் காரணமாகிவிட்டேன் என்று உருக்கமாக ஒரு வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்த நடிகரை சினிமாவில் நடிக்க அழைத்து வந்தவரே வையாபுரி தான். அவர் வேறு யாரும் இல்லை நடிகர் பாரி வெங்கட். இயக்குனர் எழில் முதல்முறையாக அறிமுகமான படம் துள்ளாத மனமும் துள்ளும். விஜய் சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி, உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், 200 நாட்கள் தியேட்டர்களில் ஓடி பெரிய வெற்றிப்படமாக அமைந்து இயக்குனர் எழிலுக்கு, முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை பெற்ற இயக்குனர் என்ற பெருமையை பெற்று தந்தது. காலம் கடந்து நிலைத்திருக்கும் இந்த படத்தில் காமெடியில் அசத்தியவர் தான் பாரி வெங்கட். படத்தில் அவர், டவுசர் பாண்டி என்ற கேரக்டரில் ஏரியா ரவுடியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருப்பார். அவரின் உண்மையாக பெயர் மறந்து டவுசர் பாண்டி என்றால் தான் அடையாளம் தெரியும் அளவுக்கு அவரது கேரக்டர் இன்றுவரை நிலைத்திருக்கிறது. ஆனால் அவர் தற்போது உயிருடன் இல்லை. துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு பிறகு, பிரபு நடிப்பில் வெளியான திருநெல்வேலி படத்தில் நடித்திருந்தார் பாரிவெங்கட். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அவர், 3 நாட்கள் ஆகியும் வீட்டுக்கு வராத நிலையில், அவரது உறவினர்களும் நண்பர்களும் பல இடங்களில் தேடியுள்ளனர். ஒரு கட்டத்தில், ஒரு வார தேடலுக்கு பிறகு பாரி வெங்கட், பெரம்பலூர் அருகே விபத்தில் சிக்கியதாக தகவல் கிடைத்து, அங்கு சென்று பார்த்துள்ளனர். அதன்பிறகு அவரது உடலை மீட்ட சக காமெடி நடிகர்கள் இறுதி மரியாதை செய்துள்ளனர். இவரது மரணம் குறித்து அறிந்த நடிகர் விஜய் அப்போது தனது அப்படி எஸ்.ஏ.சியுடன் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அவரது மனைவிக்கு நிதியுதவி அளித்துள்ளார். ஆன்தி ஸ்பாட்டில் காமெடி காட்சிகளை எழுதி அசத்தும் திறன் கொண்ட பாரி வெங்கட் விஜய்க்கு மிகவும் பிடித்த நடிகராக இருந்துள்ளார் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் கூட அந்த கறிக்கடை காமெடி, லைட் ஹவுஸ்க்கு ரூட் சொல்லும் காமெடிகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அவரது மரணம் தமிழ் சினிமாவுக்கு உண்மையில் பெரிய இழப்பு தான் என்று சொல்லலாம். "ஒரு நடிகரோட இறப்புக்கு நானும் காரணம் ஆயிட்டேன்"😳 - வையாபுரி💔🥺 pic.twitter.com/mMx2w8a3Vq — Tharani ʀᴛᴋ (@iam_Tharani) August 27, 2026 எஸ்.வி.சேகரின் நாடகங்களில் நடித்து வந்த பாரி வெங்கட் சினிமாவில் அறிமுகமாக முக்கிய காரணம் வையாபுரி தான். துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு சென்னை பாஷை பேசும் ஒரு நடிகர் தேவை என்று அவரிடம் சொன்னபோது அவர் தான் பாரி வெங்கட்டை அழைத்து சென்றுள்ளார். மிகப்பெரிய காமெடி நடிகராக வந்திருக்க வேண்டிய அவர் பாதியில் மரணமடைந்துவிட்டார். அவரை நாடகங்களிலே விட்டிருந்தால் இன்னும் நடித்துக்கொண்டு இருந்திருப்பார். அவரை சினிமாவுக்கு அழைத்து வந்து அவரது சாவுக்கு நானே காரணமாகிவிட்டேன் என்று வையாபுரி கூறியுள்ளார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பெரிய ஆள வர வேண்டியவர், அவர் மரணத்திற்கு நானே காரணமாகி விட்டேன்: பிரபல நடிகர் பற்றி மனம் உருகிய வையாபுரி
PulseNews சுருக்கம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் வையாபுரி, சக நடிகர் ஒருவரின் மரணத்திற்குத் தாம் தான் காரணம் என்று உருக்கமான காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளார். பாரி வெங்கட் எனும் அந்த நடிகரை சினிமாத்துறைக்கு அறிமுகப்படுத்தியதே வையாபுரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் எழில் இயக்கத்தில் விஜய், சிம்ரன் நடித்த 'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படத்தில் வையாபுரி, பாரி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் 200 நாட்களைக் கடந்து வெற்றி பெற்ற அந்தப் படத்தில், பெரிய இடத்திற்கு வரவேண்டிய திறமையான கலைஞரான பாரி வெங்கட்டின் மறைவுக்குத் தாம் காரணமாகிவிட்டதாக வையாபுரி வேதனை தெரிவித்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema