ரஜினி தான் ஹீரோனு சொல்லவே இல்ல, பட பூஜையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்: சிவாஜி படம் குறித்து மனம் திறந்த ஸ்ரேயா
எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான, ஸ்ரேயா சரண் தனது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வாய்ப்புகளில் ஒன்றான, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ படத்தில் வாய்ப்பு கிடைத்த விதம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: இந்தப் படத்திற்காக முதன்முதலில் தன்னை அணுகியபோது, தன்னுடன் நடிக்கப் போகும் நடிகர் யார் என்பதே தனக்குத் தெரியாது என்று அவர் தெரிவித்துள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிகழ்ச்சிக்காக சென்னைக்கு வந்தபோதுதான், தான் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போவதை அறிந்ததாகவும் கூறியுள்ளார். பிங்க்வில்லா உடனான உரையாடலில் பேசிய ஸ்ரேயா, படத்தைப் பற்றிய பல விஷயங்களை ஷங்கர் ஆரம்பத்தில் ரகசியமாக வைத்திருந்ததாகக் கூறினார். அவர் படத்தை அறிவிக்கும் வரை எல்லாமே ரகசியமாக இருந்தது. அதனால் அவர் என்னை அழைத்தார். ‘ஒரு படத்தில் நீங்கள் நடிக்கப் போகிறீர்கள்’ என்று ஷங்கர் சார், சொன்னார். நான் ‘சரி’ என்றேன். அதற்கு அவர், ‘ஒரு நல்ல நேரம் இருக்கிறது’ என்றார். தற்செயலாக, அந்த நாளில் நான் எந்த பணியும் இல்லாமல் ப்ரியாக இருந்தேன். அதனால் சென்னைக்கு வந்தேன். அதன் பிறகுதான் அந்தப் படம் எந்த அளவுக்கு பிரம்மாண்டமானது என்பதை உணர்ந்தேன். அங்கு (‘சிவாஜி: தி பாஸ்’ படத்தின் தொடக்க விழாவுக்கு) பெரிய பெரிய பிரபலங்கள் வந்திருந்தார்கள். ரஹ்மான் சார், ரஜினி சார் என பலர் இருந்தார்கள். நான் ஷங்கர் சாரைப் பார்த்து, ‘என்னை இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. இவ்வளவு பெரிய மனிதர்கள் எல்லாம் இங்கே வந்திருக்கிறார்கள்’ என்றேன். அப்போது அங்கே யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியவில்லை.பின்னர் ஷங்கர், ரஜினிகாந்தை படத்தின் ஹீரோவாக அறிமுகப்படுத்தியபோதுதான் எனக்கு உண்மை தெரியவந்துள்ளது. எனக்கு எதுவுமே தெரியாது. ‘உங்கள் கதாநாயகனை சந்தியுங்கள், ரஜினி சார்’ என்றார். நான் ‘வாவ்!’ என்று நினைத்தேன். இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்துடன் நடிக்கப் போவதை நினைத்து ஆரம்பத்தில் தான் மிகவும் பதற்றமாக இருந்தது. ஆதனால் அந்தப் பதற்றத்தைப் போக்க, படப்பிடிப்பு ஒத்திகைக்கு முன்பே ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்றும் ஷங்கரிடம் கேட்டேன். நான் ஷங்கர் சாரிடம், ‘ஒத்திகைக்கு முன்பே நாம் சந்திப்போம். ஏனென்றால், அவருடன் முதல் முறையாக நடிக்கும்போது நான் உறைந்து போய்விடுவேன்’ என்றேன். அதைக் கேட்டு அவர் சிரித்தார். ஒத்திகையின்போது ரஜினிகாந்தை சந்தித்தது தனது பதற்றத்தை உடனடியாகப் போக்க உதவியது. அப்போது தான் நான் அவரை முதன்முறையாக சந்தித்தேன். படப்பிடிப்பின்போதும் அவர் என்னை மிகவும் இயல்பாக உணர வைத்தார். அவர் இவ்வளவு பெரிய நடிகர் என்பதை உங்களுக்கு உணரவே விடமாட்டார். மிகவும் எளிதாக அணுகக்கூடியவர். அவரைச் சுற்றியிருப்பவர்களையும் ரஜினிகாந்த் எளிதாகவும் நெருக்கமாகவும் உணரச் செய்வார். ஐந்து நிமிடங்களுக்குள்ளேயே அனைவரையும் மிகவும் சிறப்பானவர்களாக உணரச் செய்வார். அடுத்த பத்து நிமிடங்களில், அவர் உங்கள் சிறந்த நண்பர் போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுவார். அதுதான் அவரிடம் இருக்கும் சிறப்பு. படப்பிடிப்பு முழுவதும் ரஜினிகாந்திடம் தான் கவனித்ததும் இதே எளிமையான அணுகுமுறைதான். ரஜினிகாந்த் சார் மிகவும் எளிமையானவர், யதார்த்தமானவர். உண்மையில், அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் லைட் பாய் முதல் நடிகர் வரை அனைவரையும் மரியாதையுடன் நடத்துவார். வேலை மீதான ரஜினிகாந்தின் அணுகுமுறை என் மீது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியது. கடின உழைப்புதான் மிகவும் முக்கியமான விஷயம் என்று அவர் எப்போதும் என்னிடம் கூறுவார். உங்கள் வேலையை நேசிக்க வேண்டும், தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும், தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பார். வாழ்க்கையில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிட்டோம் என்று எப்போதும் இருக்க முடியாது” என்று அவர் கூறினார். ரஜினிகாந்தின் நகைச்சுவை உணர்வு குறித்தும் ஸ்ரேயா சுவாரஸ்யமாகப் பகிர்ந்துள்ளார். அவரது நகைச்சுவையான அணுகுமுறை படப்பிடிப்பு தளத்தின் சூழலையே மிகவும் இலகுவாக மாற்றிவிடும் என்றும் அவர் கூறினார். அவருக்கு நகைச்சுவை உணர்வு மிகவும் அதிகம். யாரையாவது கிண்டல் செய்துகொண்டே இருப்பார். ஏதாவது ஒன்றை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பார். ‘அந்தப் பையன் உங்களிடம் வழியப் பார்க்கிறான் என்று நினைக்கிறேன்’ என்று கூட சொல்வார்” என்று ஸ்ரேயா நினைவுகூர்ந்தார். படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் யாரையாவது கிண்டல் செய்துகொண்டு, ஏதாவது ஒரு குறும்பு செய்துகொண்டே இருப்பார். அதுமட்டுமல்லாமல், அவர் நிறைய படித்தவரும் கூட. மிகவும் நன்றாகப் படித்தவர்” என்றும் அவர் கூறினார். 2007-ஆம் ஆண்டு வெளியான ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்படத்தை ஷங்கர் இயக்கினார். ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரேயா சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய பிரம்மாண்டத்தில் உருவாக்கப்பட்ட இப்படம், மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. ஸ்ரேயா சரணின் திரையுலக வாழ்க்கையிலும் இந்தப் படம் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள மொழிப் படங்களில் அவர் நடித்துள்ளார்.

‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஸ்ரேயா சரண், ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்த விதம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்தப் படத்திற்காகத் தன்னை அணுகியபோது, தனக்கு ஜோடியாக நடிக்கப் போகும் நடிகர் யார் என்பது குறித்த விவரம் தனக்குத் தெரியாது என்று ஸ்ரேயா வெளிப்படையாகக் கூறியுள்ளார். அந்தப் பட பூஜையின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.