PulseNews
சினிமா

Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?

அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நிலையில், ஏபிபி நாடு செய்திகளுக்காக அளித்த பிரத்யேக பேட்டியில், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். தன்னிடம் வசதி இல்லாத காரணத்தாலேயே தேர்தலில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், திராவிட சித்தாந்தமே சிதைக்கப்பட்டுவிட்டதாகவும் கண்கலங்க கூறினார். அவரது பேட்டியிலிருந்து முக்கிய அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

“வேதனையோடும், கசப்போடும் அதிமுகவை விட்டு பிரிந்தேன்“

ஜெயலலிதாவின் மறைவிற்குப்பிறகு கூட 9 ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமியுடன் பயணித்ததாகவும், சில கருத்துவேறுபாடுகள், காயங்கள், மன வருத்தம், ஏற்றம், ஏமாற்றம், இன்னும் பல்வேறு இடர்பாடுகள் எல்லாம் இருந்ததாக வைகைச்செல்வன் தெரிவித்தார். பல்வேறு முக்கிய தளபதிகள் கட்சியை விட்டு சென்ற நிலையில், தளபதிகளை இழந்தால் படைகள் சோர்ந்துபோய்விடும் என்று பலமுறை எடப்பாடி பழனிசாமியிடம் சொன்னதற்கு, இல்லை, நாம் தான் பெரிய படை என்று கூறிவிட்டதாகவும், அதன் எதிரொலியாக இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வி அடைந்ததாகவும், அந்த வேதனையோடும், கசப்போடும்தான், அதிமுகவை விட்டு பிரிந்து வந்ததாக அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

எதிர்க்க வேண்டிய திமுகவுடன் சமரசம் செய்தது அதிமுக

தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்ததற்கான காரணத்தை கூறிய அவர், 40 ஆண்டுகாலமாக திமுகவை தீவிரமாக எதிர்த்தே அரசியல் செய்த அதிமுக, தீய சக்தி திமுக என்று சொல்லவேண்டிய அதிமுக, திமுகவிடம் சமரசத்திற்கு ஆளாகிவிட்டதாக வைகைச்செல்வன் குற்றம்சாட்டினார்.

ஆனால் மறுபுறம், தீயசக்தி திமுக என்று நெஞ்சுரத்தோட சொல்லி, அக்கட்சிக்கு எதிராக உக்கிரமாக செயல்பட்டு, கடுமையாக எதிர்த்து களமாடியதாலேயே, தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தலில் இப்படி ஒரு வெற்றி கிடைத்ததாக அவர் கூறினார். மேலும், அவர்கள் தீய சக்தி, நாங்கள் தூய சக்தி என்று தவெக தலைவர் விஜய் கூறியது, மக்கள் மனதில் இயல்பாக ஒட்டிக்கொண்டது என தெரிவித்தார்.

“விஜய்யிடம் ஈர்ப்பு உள்ளது“

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விஜய்யை பார்த்தபோது, அவரிடம் ஒரு ஈர்ப்பு இருந்ததாக வைகைச்செல்வன் தெரிவித்தார். அதாவது, எம்ஜிஆரைப் பார்த்தபோது ஒரு ஈர்ப்பும், இனம்புரியாக பற்றும், பாசமும் இருந்ததோ, அதைப்போலவே விஜய்யிடம் தான் கண்டதாக அவர் கூறினார்.

அதேபோல், ஜெயலலிதா எப்படி ஒரு தாயுள்ளத்தோடு அரவணைத்துக்கொண்டாரோ, அப்படி ஒரு பாசமும், நெகிழ்ச்சியும், அன்பும் விஜய்யிடம் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

திராவிட சித்தாந்தத்தின் பெரும் தோல்வியில் தான்... துக்கத்தில் கண்கலங்கிய வைகைச்செல்வன்

திராவிட இயக்கங்களான திமுக, அதிமுக குறித்து பேசிய வைகைச்செல்வன், எந்த கொள்கைக்காக அண்ணா இந்த இயக்கத்தை தொடங்கினாரோ, அது தற்போது சிதைக்கப்பட்டுவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். அதாவது, அரசியல் பின்புலம் இல்லாதவர்கள், ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்கள், அடுத்த வேளை சாப்பாட்டிற்கு வழி இல்லாதவர்கள் கூட, ஜனநாயகத்தின் நம்பிக்கையை ஏற்று, அவர்களை தேர்தலில் நிற்க வைத்து, அந்த கட்சியின் அடையாளமாக, சட்டமன்ற உறுப்பினராக வந்து, அமைச்சராக முடியும் என்று நிரூபித்தது திராவிட இயக்கம் என்று அவர் கூறினார்.

இப்படி இருக்கையில், கரூரில் 120 கோடி ரூபாயும், கோவை தெற்கில் 160 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளனர். இதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கையா.? அது எங்கே போனது.? அதை ஏன் மாற்றினீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், அந்த பெரும் தோல்வியில் இருந்துதான், தமிழக வெற்றிக் கழகம் பிறந்துள்ளது என அவர் கூறினார்.

அதோடு, திராவிட கொள்கைகளை, தாங்கள் எல்லாம் கிராமப்புறங்களில் எல்லா இடங்களிலும், பட்டி தொட்டி எங்கும் சென்று பேசி, பரப்பியதாக நா தழுதழுக்க கூறிய அவர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா எல்லோரும், எளியவர்களையும் அரசியல் களத்திற்கு உயர்த்தி விட்டவர்கள் என்றும், அந்த இடத்தை எடப்பாடி பழனிசாமியால் தொட முடியவில்லை என்றும் கண்கலங்க கூறினார்.

மேலும், 10 கோடி இருக்கிறதா, 20 கோடி இருக்கிறதா என கேட்கிறார், தேர்தலுக்கு எதற்கு பணம் என்று அவர் கேள்வி எழுப்பினார். அப்படி வசதி இல்லாததாலேயே தனக்கு தேர்தலில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் முன்னாக வைகைச்செல்வன் கூறினார்.

இப்படி இருக்கையில், தற்போதைய ஆட்சி மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதாகவும், மனுக்களோடு வாருங்கள், பணத்தோடு வராதீர்கள் என்று அரசு அலுவலகங்களில் எழுதிப்போடும் அளவிற்கு தற்போதைய ஆட்சி நடப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார் வைகைச்செல்வன்.

Source: Read Full Article

Ipd Tamil - Latest Tamil News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
PulseNews சுருக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், ஏபிபி நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள அவர், தன்னிடம் போதுமான வசதி இல்லாத காரணத்தினாலேயே தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

திராவிட சித்தாந்தம் சிதைக்கப்பட்டுவிட்டதாகக் கூறி வைகைச்செல்வன் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். மிகுந்த வேதனையுடனும் கசப்புணர்வுடனும் தான் அதிமுகவிலிருந்து பிரிந்து வந்ததாகவும் அவர் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema