PulseNews
சினிமா

'ஓ மை டாக்' பட சிறப்பு காட்சி, போட்டோ எடுத்த கே.ஜி.எப். நடிகையை கடிக்க வந்த நாய்: உண்மையில் நடந்தது என்ன?

பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பங்கஜ் திரிபாதியின் ஓ மை டாக் (‘Ohh My Dog’) திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில் கலந்து கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக நடந்த ஒரு சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 6) மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திரைப்படத்தில் நடித்துள்ள நாயுடன் ரவீனா டாண்டன் சிவப்புக் கம்பள வரவேற்புப் பகுதியில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். புகைப்படம் எடுக்கும் நிகழ்வு முடிந்து அவர் எழுந்தபோது, அந்த நாய் திடீரென ஆக்ரோஷமாகக் குரைக்கத் தொடங்கியது. மேலும், ரவீனாவைக் கடிக்கவும் முயன்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்குப் பிறகு வெளியே வந்த ரவீனா டாண்டன், தான் நலமாக இருப்பதாகத் தெரிவித்தார். தனது உடையில் இருந்த ஒரு நூல் தற்செயலாக நாயின் வாயில் சிக்கிக் கொண்டதால்தான் அந்தச் சம்பவம் ஏற்பட்டதாகவும் அவர் விளக்கினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. அந்தச் சூழ்நிலையிலும் ரவீனா டாண்டன் மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் நடந்து கொண்டதற்காக பலரும் அவரைப் பாராட்டினர். View this post on Instagram A post shared by Varinder Chawla (@varindertchawla) ஒருவர், “ரவீனா மேடம், உங்கள் பொறுமைக்கும் அன்பான அணுகுமுறைக்கும் நன்றி” என்று பதிவிட்டிருந்தார். மற்றொருவர், “உண்மையான விலங்குகள் நேசிப்பவரின் அடையாளம்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் ஒருவர், “சுற்றிலும் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருந்ததால் அந்த நாய் மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம். இந்த சூழ்நிலையை மிகவும் நிதானமாகக் கையாண்ட ரவீனாவுக்கு நன்றி” என்று தெரிவித்தார். மற்றொரு ரசிகர், “அவர் எவ்வளவு அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய மரியாதை” என்று பாராட்டியுள்ளார். அமித் ராய் இயக்கியுள்ள ஓ மை டாக் திரைப்படம் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பொழுதுபோக்குத் திரைப்படமாகும். இதில் பங்கஜ் திரிபாதியுடன் பவன் மல்ஹோத்ரா, மாஹி ராய், ராஜேஷ் குமார், கீதா அகர்வால், விஜய் மிஸ்ரா, ஸ்ரீதர் துபே, புல்லூ குமார், சுலக்யனா பருவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையுடன், விலங்குகள் மீது அன்பும் கருணையும் காட்ட வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்துவதாக இயக்குநர் அமித் ராய் தெரிவித்துள்ளார். View this post on Instagram A post shared by Varinder Chawla (@varindertchawla) இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “நாய்கள் எதையும் எதிர்பார்க்காமல் தூய்மையான அன்பையும் விசுவாசத்தையும் நமக்குக் கற்றுத் தருகின்றன. ஓ மை டாக் திரைப்படத்தின் மூலம் உணர்வுப்பூர்வமாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் ஒரு கதையைச் சொல்ல விரும்பினேன். இது ஒரு குழந்தைக்கும் நாய்க்கும் இடையிலான உறவைப் பற்றிய திரைப்படம் மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களுடனும் கருணையுடன் இணைந்து வாழக் கற்றுக்கொள்வது பற்றிய கதையாகும்” என்று கூறியுள்ளார். மேலும் அவர், “இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பார்வையாளர்களின் இதயத்தில் விலங்குகள் மீதான கருணை சிறிதளவாவது அதிகரித்தால், இந்தத் திரைப்படம் தனது நோக்கத்தை உண்மையாக நிறைவேற்றியதாக நான் கருதுவேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

The Indian Express1 நாள் முன் · புதுப்பிக்கப்பட்டது
'ஓ மை டாக்' பட சிறப்பு காட்சி, போட்டோ எடுத்த கே.ஜி.எப். நடிகையை கடிக்க வந்த நாய்: உண்மையில் நடந்தது என்ன?
PulseNews சுருக்கம்

மும்பையில் நடைபெற்ற பங்கஜ் திரிபாதியின் ‘ஓ மை டாக்’ திரைப்பட சிறப்புக் காட்சியின்போது, நடிகை ரவீனா டாண்டனுடன் புகைப்படம் எடுக்க வந்த நாய் திடீரென அவரை கடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது உடையில் இருந்த நூல் நாயின் வாயில் சிக்கியதே இந்தச் சம்பவத்திற்கு காரணம் என்றும், தான் நலமாக இருப்பதாகவும் ரவீனா டாண்டன் விளக்கமளித்தார்.

சமூக வலைதளங்களில் பரவிய இந்த வீடியோவில், அந்த இக்கட்டான சூழலிலும் ரவீனா டாண்டன் மிகுந்த நிதானத்துடன் செயல்பட்டதை பலரும் பாராட்டி வருகின்றனர். அமித் ராய் இயக்கத்தில் உருவான இப்படம், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான அன்பையும் கருணையையும் மையமாகக் கொண்டு குடும்பப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema