அடச்சீ... இப்படி ஒரு புருஷனா? ஹனிமூன் வந்த இடத்தில் மனைவிக்கு வந்த மாதவிடாய்..... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி! 45 நாட்களில் முடிந்த வாழ்க்கை.... பகீர் சம்பவம்...!!!
திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில், கோரக்பூரைச் சேர்ந்த தம்பதி அந்தமானுக்கு முதலிரவு கொண்டாட சென்றுள்ளனர். அங்குள்ள ஹோட்டலில் தங்கியிருந்தபோது, மனைவிக்கு எதிர்பாராதவிதமாக மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை சரமாரியாக தாக்கியதுடன் கழுத்தை நெரித்துக் கொலை செய்யவும் முயன்றதாக கூறப்படுகிறது. மாதவிடாய் ஏற்பட்டதால் மனைவி மீது தாக்குதல் ஹோட்டல் அறையில் மனைவியிடம் கணவன் கடுமையாக நடந்து கொண்டுள்ளார். ஆத்திரத்தில் அவரை காலால் மிதித்தும், கைகளால் தாக்கியும் கொடூரமாக தாக்கியதாக தெரிகிறது. அதன்பிறகும் கோபம் தணியாமல், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதையும் படிங்க: அடக்கொடுமையே... பிணத்தை கூட விட்டுவைக்கல.... துப்புரவு பணியாளர் செய்த அதிர்ச்சி காரியம்..! சிக்கிய சிசிடிவி காட்சி...!!! அலறல் சத்தம் கேட்டு காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்கள் அறையில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதும் ஹோட்டல் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றுள்ளனர். நிலைமையைப் பார்த்த அவர்கள் உடனடியாக தலையிட்டு பெண்ணை கணவனிடமிருந்து மீட்டனர். இதனால் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. கணவன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 4 பேர் மீது கோரக்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இயற்கையான உடலியல் நிகழ்வான மாதவிடாய் காரணமாக மனைவியை தாக்கியதாக கூறப்படும் கணவனின் நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திருமணமான 45 நாட்களிலேயே தம்பதியின் உறவு முறியும் நிலைக்கு சென்றுள்ளது. இதையும் படிங்க: ஐயோ... இப்படியா ஆகணும்! வாழை மரத்தில் மறைந்திருந்த எமன்! மரத்தை வெட்டிய தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.... நொடியில் துடிதுடித்து இறந்த 8 வயது மகன்...!!!

கோரக்பூரைச் சேர்ந்த தம்பதி தங்களது தேனிலவு கொண்டாட்டத்திற்காக அந்தமானுக்குச் சென்றிருந்தனர். திருமணமான 45 நாட்களிலேயே அங்கு தங்கியிருந்தபோது, மனைவிக்கு எதிர்பாராதவிதமாக மாதவிடாய் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியைக் கடுமையாகத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளார். மனைவியை காலால் மிதித்தும் கைகளால் தாக்கியும் அவர் கொடுமைப்படுத்திய இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.