Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?

நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பால் நடிகை ஷகிலா கழுத்தில் ஆபரேஷன் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எங்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு

முன்பெல்லாம் யார் கையிலாவது செல்போன் இருந்தாலே ஆச்சரியமாக பார்ப்போம். ஆனால் இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன் யாரிடம் இல்லையோ அவர்களை ஆச்சரியமாக பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பிறக்கும் குழந்தைகள் தொடங்கி தள்ளாடும் முதியவர்கள் வரை ஸ்மார்ட்போன் அடிமையாக மாறிக் கொண்டிருக்கின்றனர். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. காலை தொடங்கி இரவு தூங்கும் வரை செல்போன் பயன்பாடு இல்லாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை குறைவு.

இவர்களுக்கெல்லாம் பாடமாக அமைந்துள்ளது பிரபல நடிகை ஷகீலாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு. இதற்காக அவர் கழுத்தில் ஆபரேஷன் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஷகீலாவுக்கு என்ன ஆச்சு?

தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அவர் தனது யூட்யூப் சேனலில் வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். அதாவது, “அதிகப்படியான கைபேசி பயன்பாட்டினால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு கழுத்தில் பட்டை அணியுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஒரு பக்கமாக படுத்துக்கொண்டு நீண்ட நேரம் கைபேசியைப் பயன்படுத்தி வந்தேன்.

இதனால் எனது கழுத்தில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக, நான் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டியிருந்தது. அதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவானது. இந்த சம்பவத்தால் செல்போன்களை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். மேலும் குழந்தைகளுக்கு கேட்ஜெட்களைக் கொடுக்க வேண்டாம்.

தன்னுடைய செயலால் ஏற்பட்ட பாதிப்பால் தற்போது தான் எழுவதற்கும், சாப்பிடுவதற்கும் கூட அடுத்தவர் உதவி தேவைப்படுவதாகக் கூறியுள்ளார். தொடர்ந்து 4 மணி நேரம் என் மொபைலில் கேம்ஸ் விளையாடுவேன். டீ அல்லது காபி குடிக்க மட்டுமே எழுவேன். பிறகு மீண்டும் வந்து அதே விளையாட்டைத் தொடர்வேன். அதன்பிறகு, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பேன். இந்த முறையற்ற உடல் நிலை மற்றும் அதிகப்படியான மொபைல் பயன்பாடு காரணமாக நான் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளேன். பணத்தை செலவழிப்பதை விட பெற்றோர்கள் தாங்க முடியாத வேதனையையும் அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஷகிலாவுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை நாளை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால் பலரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள சமூக வலைத்தளங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏற்கனவே இன்டர்நெட் இல்லாமல் பலருக்கும் பைத்தியம் பிடித்து விடும் சூழலில் ஸ்மார்ட்போன் இல்லாமலும் பலராலும் இருக்க முடியாத நிலைமைக்கு சமூகம் சென்று கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அதிக நேரம் அலைபேசியைப் பயன்படுத்தியதால் நடிகை ஷகிலாவின் கழுத்தில் பாதிப்பு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்தச் சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்காலச் சூழலில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிவிட்ட நிலையில், இந்த விபரீத விளைவு நிகழ்ந்துள்ளது.