Hi Movie: காதலிச்சு கல்யாணம் பண்ணனும்.. இல்ல கல்யாணம் பண்ணிட்டு காதலிக்கும்.. நயன்தாரா – கவினின் ஹாய் பட ட்ரெய்லர் வெளியானது!
Nayanthara - Kavins Hi Trailer: இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடித்திருக்கும் புது திரைப்படம் ஹாய். இந்த படம் பீல் குட் காதல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள நிலையில், வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. அதை முன்னிட்டு இன்று (20/08/2026) இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு பகிர்ந்துள்ளது.

விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடித்துள்ள 'ஹாய்' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (20/08/2026) வெளியாகியுள்ளது. ஒரு அழகான காதல் கதையை மையமாகக் கொண்டுள்ள இப்படம், தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
காதலித்து திருமணம் செய்வதா அல்லது திருமணம் செய்துவிட்டு காதலிப்பதா என்ற கருப்பொருளைக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஒரு பீல்-குட் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.