PulseNews
சினிமா

விஜய் ஆட்சியை பற்றி பேசுங்கள், ஒரு பெண்ணை விமர்சிப்பது சரி அல்ல: சுதந்திர தின விழாவில் பங்கேற்ற த்ரிஷாவுக்கு பிரபல நடிகை ஆதரவு

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் முதல்முறையாக கொடியேற்றிய நிலையில், இந்த நிகழ்வில் நடிகை திரிஷா கிருஷ்ணன் கலந்து கொண்டது, பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அரசியல்வாதியான விஜய்யுடனான அவரது உறவு குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: இந்நிலையில், நடிகையும் தெலுங்கு பிக்பாஸ் தெலுங்கு போட்டியாளருமான சஞ்சனா கல்ராணி, திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மேலும், அரசியல்வாதியான விஜய்யின் பணிகளைப் பற்றி பேசாமல், ஏன் திரிஷா குறிவைக்கப்படுகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இந்தியா டுடேவிடம் பேசிய சஞ்சனா, ஆகஸ்ட் 15-ம் தேதி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் திரிஷா கலந்து கொண்டதைப் பற்றி பேசுவதைவிட, அரசியல்வாதியாக விஜய் செய்து வரும் பணிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். மேலும், இந்த விவாதத்துக்குள் ஒரு பெண்ணை ஏன் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். உங்களுக்கு தைரியம் இருந்தால், தளபதி விஜய்யைப் பற்றி தொழில்முறையாகப் பேசுங்கள். அவரது ஆட்சி குறித்து பேசுங்கள். ஏன் ஒரு பெண்ணைப் பற்றி பேசுகிறீர்கள்? இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த நிலைமை எந்த அளவுக்கு சென்றுள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இந்த நேரத்தில் தளபதி விஜய்க்கு எதிராக தொழில்ரீதியாக எதையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்” என்று அவர் கூறினார். திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஆதரவு திரிஷா தனது தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்டதாக வைத்திருக்க முழு உரிமை கொண்டவர் என்றும் சஞ்சனா கல்ராணி தெரிவித்தார். விஜய்யுடனான அவரது உறவு குறித்து வெளியாகும் ஊகங்களின் அடிப்படையில் திரிஷாவை மதிப்பிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். எந்த நிலையிலும் இருக்கும் ஒரு பெண்ணை மதிப்பது மிகவும் முக்கியம். திரிஷா ஒரு வெற்றிகரமான நடிகை. அவர் சமமான மரியாதைக்கு தகுதியானவர். எதுவாக இருந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அவர்கள் நண்பர்களாக இருந்தாலும், கணவன்-மனைவியாக இருந்தாலும், காதலர்-காதலியாக இருந்தாலும், அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஏன் அவர்களை மதிப்பிட வேண்டும்? அரசியல்வாதியாக விஜய் செய்த சாதனைகளைப் பற்றி பேசுங்கள். அவரது குறைகளைப் பற்றி பேசுங்கள். உங்களால் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கலாம். அதற்காக ஒரு பெண்ணை குறிவைக்கக் கூடாது” என்று சஞ்சனா கூறினார். சுதந்திர தின நிகழ்ச்சியில் திரிஷா பங்கேற்றது சர்ச்சை சுதந்திர தின நிகழ்ச்சியில் திரிஷா கலந்து கொண்ட விவகாரம் திமுக தரப்பிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி, ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியிட்ட தலையங்கத்தில் விஜய்யின் செயல்பாட்டை விமர்சித்தது. சுதந்திர தின விழாவில் முன்வரிசையில் ஒரு நடிகையை அமர வைத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியது. அந்தத் தலையங்கத்தில் திரிஷாவின் பெயர் நேரடியாக குறிப்பிடப்படாமல், “ஒரு நடிகை” என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தத் தலையங்கத்தில், “சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதல்வர் விஜய்யின் கண்ணியம் காற்றில் பறந்தது. அவருக்கு வாக்களித்தவர்களால்கூட அந்தக் காட்சியை சகித்துக்கொள்ள முடியவில்லை. எந்தவித வெட்கமும், சங்கடமும் இல்லாமல் ஒரு நடிகையை முன்வரிசையில் அமர வைத்து, இருவரும் ஒருவருக்கொருவர் சல்யூட் செய்துகொண்டனர்” என்று விமர்சிக்கப்பட்டிருந்தது. மேலும், விஜய்யின் இந்தச் செயல்பாட்டை பொதுமக்கள் எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் என்றும் முரசொலி கேள்வி எழுப்பியது. அவரது ஆதரவாளர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக வாக்காளர்கள் சிலருக்குக்கூட அவரது நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அந்தத் தலையங்கம் குறிப்பிட்டது. விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்ற சங்கீதா இந்தச் சர்ச்சை எழுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, விஜய்யின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விஜய்க்கு எதிராக தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றதாக செய்திகள் வெளியாகின. நீதிமன்ற உத்தரவின்படி, சங்கீதா காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பான நடவடிக்கைகளைத் தொடர விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, அவர் வாபஸ் பெறுவதற்கான மனுவையும் தாக்கல் செய்தார். பின்னர் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 2026 பிப்ரவரி மாதம் சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். விஜய்யும் சங்கீதாவும் 1999-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். விஜய் – திரிஷாவின் பொது நிகழ்ச்சிகள் விஜய் மற்றும் திரிஷா இணைந்து பொது நிகழ்ச்சிகளில் தோன்றுவது தொடர்ந்து பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்து வருகிறது. சங்கீதாவின் விவாகரத்து மனு குறித்த செய்திகள் வெளியான சில நாட்களுக்குப் பிறகு, சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய்யும் திரிஷாவும் ஒன்றாகக் காணப்பட்டனர். அதன் பின்னர், தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் விஜய்யின் இல்லத்தில் திரிஷா காணப்பட்டார். அந்த நாள் திரிஷாவின் பிறந்தநாளாகவும் இருந்தது. விஜய் மற்றும் திரிஷா இருவரும் கில்லி, திருப்பாச்சி, குருவி, லியோ உள்ளிட்ட பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 2023-ம் ஆண்டு வெளியான லியோ திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்தது, அவர்களது கூட்டணி குறித்த ஆர்வத்தை மீண்டும் ஏற்படுத்தியது. அதன்பிறகு, இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகத் தோன்றுவது தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விஜய் ஆட்சியை பற்றி பேசுங்கள், ஒரு பெண்ணை விமர்சிப்பது சரி அல்ல: சுதந்திர தின விழாவில் பங்கேற்ற த்ரிஷாவுக்கு பிரபல நடிகை ஆதரவு
PulseNews சுருக்கம்

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் விஜய் முதன்முறையாகக் கொடியேற்றினார். இந்த நிகழ்வில் நடிகை த்ரிஷா கலந்துகொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியதுடன், இருவரது உறவு குறித்த விவாதங்களையும் மீண்டும் கிளப்பியுள்ளது.

இதனிடையே, தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான சஞ்சனா கல்ராணி த்ரிஷாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணை விமர்சிப்பதை விடுத்து, முதல்வரின் அரசியல் பணிகளைப் பற்றி விமர்சிப்பதே முறையானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema