PulseNews
சினிமா

“வயிறு ஃபுல்லா பச்ச தண்ணியை குடிச்சிட்டு...” - சூரி குறித்து கண்கலங்கிய அம்மா

செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தை வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்க தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாகவும் சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார் உள்ளிட்டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களிலும் நடித்துள்ளனர். இப்படம் கடலில் நடக்கும் படகு போட்டியை மைய்யமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதனால் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கடல் பகுதிகளில் படமாக்கப்பட்டது. அந்த வகையில் இராமநாதபுர கடலில் பல மாதங்களாக நடந்தது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாடல்களை பொறுத்தவரை கடந்த ஜூலையில் வெளியான ‘மண்டாடி மண்டாடி’ முதல் பாடல் சூரி நடனம் கவனம் பெற்றது. இதையடுத்து சமீபத்தில் வெளியான ‘உசுரே நீதான் புள்ள...’ பாடல் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அண்மையில் வெளியான படத்தின் டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் சூரியின் தாயார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, “என்னுடைய மகன் இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த மேடையில ஏறுவோம்னு நினைச்சுகூட பார்க்கல. உங்க எல்லாத்துக்கு நன்றி தெரிவிச்சுக்குறேன். ஒரு நாள் எங்க ஊர்ல ஒரு நிகழ்ச்சி நடந்துச்சு. அதுல எவ்ளோ பேருக்கோ நான் சோறு ஆக்கி போட்டேன். அந்த நேரத்துல என் புள்ள ஃபோன் பன்னுச்சு. என்னடான்னு எடுத்தேன். அம்மா... உன்ன நினைச்சு ஃபோன் பன்னேன்னு சொன்னாப்ல. நான், எங்கப்பா இருக்க சாப்டியான்னு கேட்டேன். வயிறு நிறையா பச்ச தண்ணியை குழாயை திருகிவிட்டு குடிச்சேட்டுன்னு சொன்னுச்சு. என்னால முடியல...” என கண்கலங்கினார். பின்பு பேசிய அவர், “உங்க எல்லாத்துக்கு நன்றி. நான் பேசனும்னா நிறைய பேசுவேன். ஆனா டைம் இல்ல. அதையும் மீறி பேசுனா எனக்கு அழுகதான் வரும்”என்றார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“வயிறு ஃபுல்லா பச்ச தண்ணியை குடிச்சிட்டு...” - சூரி குறித்து கண்கலங்கிய அம்மா
PulseNews சுருக்கம்

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், எல்ரெட் குமார் தயாரிப்பில் சூரி நடிக்கும் புதிய திரைப்படம் 'மண்டாடி'. வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

கடலில் நடக்கும் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ரவீந்திரா விஜய் மற்றும் அச்யுத் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema