PulseNews
சினிமா

"என்னைய கொன்னுடுங்க போலீஸ்" இறந்து விட்டதாக போஸ்டர் அடித்து கதறி துடிக்கும் ஜிபி முத்து...! இந்த நிலைமைக்கு வந்தது ஏன்?

டிக்டாக் செயலியில் நகைச்சுவை வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் ஜிபி முத்து. யூடியூப் தளத்தில் வீடியோ வெளியிட்டு வந்த ஜிபி முத்துவிற்கு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. மேலும், சில திரைப்படங்களிலும் ஜிபி முத்து நடித்து வருகிறார். கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..! ஜிபி முத்துவின் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து கடந்த 12 ஆம் தேதியன்று ஒரு பதிவு வெளியானது. ஜிபி முத்துவின் புகைப்படத்தோடு, வருந்துகிறோம், மாலை 5 மணி அளவில் இறந்துவிட்டார். அவரது நல்லடக்கம் மறுநாள் மதியம் 2 மணிக்கு உடன்குடியில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் என பதிவிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த பலரும், ஜிபி முத்து இறந்துவிட்டாரா? அவருக்கு என்ன நடந்தது? என அதிர்ச்சி அடைந்தனர். என்னை கொன்றுவிடுங்கள் - ஜிபி முத்து இதனை தொடர்ந்து, ஜிபி முத்துவின் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து மற்றொரு வீடியோ வெளியானது. அதில், பேசிய ஜிபி முத்து, எத்தனை வழக்குகள் போடுவது, விசாரணை விசாரணை என போலீசார் தனது குடும்பத்தை துன்புறுத்துகிறார்கள், குழந்தைகள் மன உளைச்சலில் உள்ளார்கள். சாத்தான்குளத்தில் நடந்தது போல தன்னை குலசேகரபட்டினம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, அடித்து கொன்றுவிடுமாறும், தான் நிம்மதியாக போய் சேர்ந்துவிடுவேன் என ஜிபி முத்து மனம் உடைந்து பேசினார். இந்த வீடியோவை பார்த்த பின்னர் தான், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் எடிட் செய்தது தான் என்றும், ஜிபி முத்து இன்னும் உயிரோடு தான் உள்ளார் என பலரும் நிம்மதி பெருமூச்சு வீட்டனர். ஆனால் இவ்வளவு வலியோடு பேச என்ன காரணம்? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அப்படி என்ன நடந்தது? திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பகுதியில் குடும்பத்தோடு வசித்து வரும் ஜிபிமுத்துவிற்கு, கடந்த சில மாதங்களாகவே பிரச்சனை மேல் பிரச்சனையாக இருந்து வருகிறது. வீட்டிற்கு அருகில் உள்ள பகுதியில் கிராம மக்கள் கோவில் கட்டுவதால் தனது வீட்டிற்கு செல்லும் பாதை அடைக்கப்படுவதாக ஜிபி முத்து நீதிமன்றத்தை நாடினார். தீர்ப்பும் ஜிபி முத்துவிற்கு சாதகமாக அமைந்தது. இதனால், கோவில் கட்டும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆத்திரத்தில் ஜிபி முத்துவின் நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் மற்றும் அவரது குடும்பத்தினர் முட்களை வெட்டிப் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜிபி முத்துவின் குடும்பத்திற்கும், பரமசிவம் குடும்பத்திற்கும் கைகலப்பு ஏற்பட்டு இரு தரப்பினரும் காயமடைந்தனர். மருத்துவமனையில் இருந்தபடியே இதுகுறித்து காயத்தோடு ஜிபி முத்து வீடியோ வெளியிட்டார். பின்னர், போலீசார் சம்பந்தப்பட்ட இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, கோவில் கட்டும் பணி தொடரவேண்டும் என கோவில் அருகே அதாவது, ஜிபி முத்துவின் வீட்டின் முன்பு நள்ளிரவில் கிராம மக்கள் பூஜை நடத்தினர். இதனை ஜிபி முத்து தட்டிக் கேட்டபோது, இரு தரப்புக்கும் கைலப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த சம்பவம் குறித்தும் போலீசார், இரு தரப்பினர் மேல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக போலீசார் சம்மந்தப்பட்டவர்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால், மன உளைச்சலுக்கு ஆளான ஜிபி முத்து, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டு, தனது மன குமுறல்களை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

Polimer News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
"என்னைய கொன்னுடுங்க போலீஸ்" இறந்து விட்டதாக போஸ்டர் அடித்து கதறி துடிக்கும் ஜிபி முத்து...! இந்த நிலைமைக்கு வந்தது ஏன்?
PulseNews சுருக்கம்

டிக்டாக் மற்றும் யூடியூப் தளங்கள் மூலம் பிரபலமான ஜிபி முத்து, பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி ஜிபி முத்துவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் மாலை 5 மணியளவில் இறந்துவிட்டதாகவும், அவரது இறுதிச் சடங்குகள் குறித்த தகவல்களும் அடங்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று பதிவிடப்பட்டது.

தன்னை கொன்றுவிடச் சொல்லி காவல்துறையினரிடம் ஜிபி முத்து கதறி அழுதபடி இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். தான் உயிரோடு இருக்கும்போதே தனக்கு அஞ்சலி போஸ்டர் அடித்து வெளியிடப்பட்ட விவகாரத்தால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema