பழம்பெரும் பாடகி நந்தா மாலினியின் இறுதிச் சடங்குகள் இன்று
தலைசிறந்த இசைக் கலைஞர் நந்தா மாலினியின் பூதவுடல் தொடர்பான இறுதிக்கிரியைகள் இன்று (22) இடம்பெறவுள்ளன. புகழ்பெற்ற இலங்கைப் பாடகி நந்தா மாலினி, தனது 82 ஆவது வயதில், நாவலவில் உள்ள தனது இல்லத்தில் இன்று (20) காலமானார். அன்னாரது பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தற்போது நாவல, விஜயபாகு மாவத்தையில் அமைந்துள்ள நந்தா மாலினி சங்கீத ஆச்சிரமத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி அஞ்சலி அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை (22) மாலை 5.00 மணிக்கு பொரளைப் பொது மயானத்தில் நடைபெறும்...

இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் நாவலவில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 20 ஆம் தேதி காலமானார். இவரது பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக நாவல, விஜயபாகு மாவத்தையில் உள்ள நந்தா மாலினி சங்கீத ஆச்சிரமத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரது இறுதிச் சடங்குகள் இன்று (22) மாலை 5 மணிக்கு பொறளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.