பிறந்த குழந்தை மாதிரி ட்ரெஸ் பண்ண முடியுமா? ஆடிஷன் வந்த பெண்ணிடம் கேட்ட ஆரி: சர்ச்சையில் பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சாமானிய மக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் காமன் மேன் ஆடிஷன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆடிஷனில் நைட்டியுடன் பங்கேற்ற இன்ஸ்டா பிரபலம் பிரபலமாகி இருந்தாலும் அவரது செயல் கடுமையாக விமர்சனங்களை கொடுத்துள்ளது. இதற்கு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விளக்கம் அளித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பிக்பாஸ் நிகழச்சியின் காமன் மேன் ஆடிஷனுக்கு வந்த பிரியா வர்ஷினி, நைட்டியுடன் வந்து சராசரி குடும்ப பெண்ணாக இருக்கிறேன் என்று தனது பேச்சை தொடங்க, அதன்பிறகு நடுவர்களை இவர் கேள்வி கேட்க, இது கடுமையாக விவாதத்தில் போய் முடித்தது. இறுதியாக ஆடிஷனில் இருந்து ரிஜக்ட் செய்யப்பட்ட பிரியா வர்ஷினி, பிக்பாஸ் ஒரு குப்பை நிகழ்ச்சி, நான் இதற்கு முன்பு பிக்பாஸை ட்ரோல் செய்து இருக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதே சமயம் இந்த ஆஷனின் முழுவீடியோ வெளியான பிறகு அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது, தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், பிரியா வர்ஷினி நடுவர்களிடம், நான் ஆரம்பத்தில் இருந்து பிக் பாஸ் பார்த்து இருக்கிறேன். எனக்கு இந்த நிகழ்ச்சி ரொம்ப பிடிக்கும். சில நேரங்களில் கலாய்த்து இருக்கிறேன் ஆனால் பிக்பாஸ் காமன் மேன் வருகிறது என்று தெரிந்ததும் உடனே அப்ளை பண்ணிட்டேன் என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நிகழ்ச்சியில், பிக் பாஸ் ரொம்ப பிடிக்கும் என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தவுடன் அது ஒரு குப்பை என்று சொல்லி இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். View this post on Instagram A post shared by Kamli Shanmugaraj (@kamli_shanmugaraj) அதேபோல் தற்போது வெளியில் வந்துள்ள அவர், தான் நைட்டியுடன் தான் ஷோவுக்கு வருவேன் என்று சொல்லி அனுமதி வாங்கியதாக கூறி வரும் நிலையில், நிகழச்சியில், விஜய் டிவி பிரபலம் ஒருவரிடம் நான் நைட்டி போட்டுட்டு வரவா? என்று கேட்க, அதற்கு அந்த நபர் அது உங்களுடைய விருப்பம். ஆனால் உள்ளே மாற்ற சொன்னால் மாற்றுவதற்கு ரெடியாக இருங்கள். அதற்காக வேற ஒரு டிரஸ்ஸையும் எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சொல்லி இருப்பது தெரிகிறது. இது குறித்தும் தற்போது கடுமையாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. View this post on Instagram A post shared by Priyavarshini Jayanthi Jagannathan (@peeveepiggy) மேலும், ஆடிஷனில் நடுவர்கள் இவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு நைட்டியுடன் வந்தது ஏன் என்று கேட்க, காமன் மேன் ஆடிஷன். அதனால் நான் வீட்டில் எப்படி இருப்பேனே அதே மாதிரி வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு ஓவியா, நீங்கள் டீச்சராக இருந்திருந்தால் மாணவர்களுக்கு படம் நடத்த இப்படித்தான் சென்றிருப்பீர்களா என்று கேட்க, அப்படி போக மாட்டேன் என்று உள்ளே இருக்கும்போது கூறியுள்ளார். ஆனால் வெளியில் வந்தபிறகு, நான் நைட்டியில் கூட பாடம் எடுக்க சென்றிருக்கிறேன் என்று கூறியுள்ளார். View this post on Instagram A post shared by @godnster (@god_n_ster) அதேபோல் நடுவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இவர் நைட்டியை மடித்து கட்டிக்கொண்டு நிற்க, அதை பார்த்த தொகுப்பாளர் ராஜூ, ஒரு மரியாதைக்காவது நைட்டியை இறக்கி விடலாமே என்று சொல்ல, இதில் என்ன மரியாதை குறைந்துவிட்டது என்று கேட்டுள்ளார். அதேபோல் தனது அம்மா இறந்த துக்கத்தில் இருந்தேன். அப்போது தான் இவர்கள் ஆடிஷனுக்கு அழைத்தார்கள். நான் வர முடியாது என்று சொல்லியும், கால் செய்து வாருங்கள் என்று தொந்தரவு செய்துகொண்டே இருந்தார்கள். அதனால் தான் வந்தேன் என்று கூறியுள்ளார். View this post on Instagram A post shared by Priyavarshini Jayanthi Jagannathan (@peeveepiggy) அவரின் பேச்சை வைத்து கடுமையாக விமர்சித்து வரும் நெட்டிசன்கள், அம்மா இறந்து போன சமயத்தில் கூட நைட்டியோட வந்து இப்படி ஒரு நிகழ்ச்சியில பிரச்சனை பண்ணுவாங்களா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். மேலும் தற்போது இவரை நைட்டி அக்கா என்று அழைத்து வருகின்றனர். View this post on Instagram A post shared by Cloud7 Media (@cloud7mediaoffl) இதனிடையே இது குறித்து விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ள பிரியா வர்ஷினி, அங்கு 2 மணி நேரம் நடந்தது. ஆனால் அவர்களுக்கு தேவையான ஃபுட்டேஜ் மட்டும் கட் செய்து போட்டிருக்கிறார்கள். பிறந்த குழந்தை உடுத்தும் ஆடை போன்று உங்களால் உடுத்த முடியுமா என்று கேட்டார்கள். இது குறித்து 15 நிமிடங்கள் மாறி மாறி பேசியிருப்போம். ஆனால் அந்த வீடியோவில் நான் பேசியதே இல்லை என்று கூறியுள்ளார். மேலும் எனக்கு என்ன தோன்றுகிறதோ அதே மாதிரி ஒரு ட்ரெஸ் போட்டு வந்தேன். ஆனால் ஆரி, பிறந்த குழந்தை ட்ரெஸ் போடுவது போல் நீங்கள் போட முடியுமா என்று கேட்டார் என கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசனுக்கான சாமானிய மக்கள் பங்கேற்கும் ஆடிஷன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரியா வர்ஷினி என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் நைட்டி அணிந்து பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆடிஷனின் போது, ஆரி அவரிடம் பிறந்த குழந்தையைப் போல் உடையணிய முடியுமா என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், பிரியா வர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.