PulseNews
சினிமா

புஸ்ஸி ஆனந்த் சொன்னது யாரை? இயக்குநர் லோகேஷ் கனகராஜா? பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசிய கருத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அரசியலுக்கு வர முயன்றாரா என்ற கேள்வியை எழுப்பியிருந்த நிலையில், அதற்கு அவரே தற்போது விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்கிய பிரபல இயக்குநர் ஒருவர், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரு தொகுதியை கேட்டதாகவும், ஆனால் அந்தத் தொகுதியை தனது நீண்டகால மாவட்டச் செயலாளருக்கே வழங்குவதாக விஜய் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாகவும் புஸ்ஸி ஆனந்த் சட்டப்பேரவையில் கூறியிருந்தார். இதையடுத்து, அவர் குறிப்பிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. அதற்கு முக்கிய காரணமாக, லோகேஷின் சொந்த ஊர் கிணத்துக்கடவு என்றும், அந்தத் தொகுதியின் மாவட்டச் செயலாளராக விக்னேஷ் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. புஸ்ஸி ஆனந்த் இந்த விவகாரம் குறித்து பேசியபோது, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த எம்எல்ஏ ஒருவர் விக்னேஷை நோக்கி கை காட்டியதும் இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இதனால், லோகேஷ் கனகராஜ் விஜய்யிடம் கிணத்துக்கடவு தொகுதியை கேட்டிருக்கலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்திலும் பரவியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து லோகேஷ் கனகராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “நான் ஏன் அதை கேட்க வேண்டும்? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்ட நபர் நான் இல்லை. வேறு யாராவது இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம், புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்ட இயக்குநர் தான் இல்லை என்பதை லோகேஷ் தெளிவுபடுத்தியுள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக பரவி வந்த இந்த தகவலுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் தற்போது அல்லு அர்ஜுனை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். அவரது சமீபத்திய படங்களான கூலி , லியோ குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கதாநாயகனாக நடித்த டிசி திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Seithipunal14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
புஸ்ஸி ஆனந்த் சொன்னது யாரை? இயக்குநர் லோகேஷ் கனகராஜா? பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ்!
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசிய கருத்து, நடிகர் விஜய்யை வைத்துப் படம் இயக்கிய இயக்குநர் ஒருவர் தேர்தலில் போட்டியிடத் தொகுதி கேட்ட விவகாரத்தை மையப்படுத்தி அமைந்தது. ஒரு குறிப்பிட்ட தொகுதியை அந்த இயக்குநர் கேட்டதாகவும், ஆனால் அதற்கு விஜய் மறுப்பு தெரிவித்து அந்த வாய்ப்பை தனது நீண்டகால மாவட்டச் செயலாளருக்கே வழங்க முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

புஸ்ஸி ஆனந்தின் இந்தக் கருத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜைக் குறிக்கிறதா என்ற கேள்வி பொதுவெளியில் எழுந்திருந்தது. இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், லோகேஷ் கனகராஜ் தற்போது உரிய விளக்கத்தை அளித்துள்ளார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema