இசையமைத்த இளையராஜாவை விட, எனக்கு சம்பளம் அதிகம்: 45 ஆண்டுக்கு முன்பே ஒரு பாட்டுக்கு அதிக சம்பளம் பெற்ற கங்கை அமரன்
கங்கை அமரன் தனது திரையுலகப் பயணத்தில் முதன்முறையாக ஒரு பாடலுக்காக ரூ.20,000 சம்பளமாக பெற்ற சுவாரஸ்யமான சம்பவத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். பயணம் தொடங்கிய காலத்தில் பல்வேறு சிரமங்களை சந்தித்தாலும், ஒரு பாடலுக்காக கிடைத்த அந்தத் தொகை தனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் கங்கை அமரன். இளையராஜாவுடன் இணைந்து பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ள அவர், தனது திரையுலக அனுபவங்கள் குறித்து அவ்வப்போது சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தான் முதன்முதலில் ஒரு பாடலுக்காக ரூ.20,000 சம்பளம் பெற்ற சம்பவம் குறித்து கங்கை அமரன் சமீபத்திய நேர்காணலில் நினைவுகூர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ஆரம்ப காலத்தில் பாடல்கள் எழுதுவதற்காக தனக்கு பெரிய அளவில் சம்பளம் கிடைத்தது கிடையாது. அந்த சூழலில், ஒரு பாடலுக்காக ரூ.20,000 வழங்கப்பட்ட சம்பவம் தனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். கங்கை அமரன் குறிப்பிட்ட சம்பவம், ‘சிறு பொன்மணி’ பாடலை எழுதிய போது தான். பாரதிராஜாவின் அஸ்தான கேமராமேனாக இருந்த நிவாஸ் இயக்கிய கல்லூக்குள் ஈரம் படத்தில் தான் இந்த பாடல் இடம் பெற்றது. படத்தில் பாரதிராஜா இயக்குனராகவே நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்த இந்த படத்தின் மூலம் தான் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் பாடல் எழுதுவதற்கான சூழல் அமைந்ததும், கங்கை அமரன் பாடலை எழுதத் தொடங்கியுள்ளார். பாடலை எழுதி முடித்த பிறகு அது பதிவு செய்யும் நிலைக்கு சென்றது. அப்போது இயக்குனரும் படத்தின் தயாரிப்பாளருமான நிவாஸ் பாடல் சூப்பராக இருக்கிறது என்று சொல்லி, ரொம்ப சந்தோஷப்பட்டார். பாடல் பதிவு முடிந்தவுடன், எதிர்பாராத விதமாக எனக்கு ரூ.20,000 சம்பளமாக கொடுத்தார். 1980-ம் ஆண்டு காலகட்டத்தை ஒப்பிடும்போது, ஒரு பாடலுக்கு ரூ.20,000 என்பது சாதாரண தொகை அல்ல. அப்போது திரையுலகில் பாடலாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் இன்றைய அளவுக்கு அதிகமாக இருக்கவில்லை. அந்த நிலையில், ஒரே ஒரு பாடலுக்காக ரூ.20,000 கிடைத்தது தனக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்துள்ளது. அண்ணன் இளையராஜாவுக்கு கூட அந்த அளவுக்கு சம்பளம் இல்லை. அதற்கு முன்பு பலமுறை தன்னிடம் பாடல்கள் குறித்து பேசப்பட்டிருந்தாலும், அந்த குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் தனது திறமையைப் புரிந்துகொண்டு அந்த அளவுக்கு சம்பளம் வழங்கியது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். திரையுலகில் தனது ஆரம்பகாலப் பயணத்தில் கிடைத்த அந்த ரூ.20,000 சம்பளம், பணத்தின் மதிப்பைத் தாண்டி தன்னுடைய திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இருந்ததாக இருந்ததாக கங்கை அமரன் கூறியுள்ளார்.

திரையுலகில் பல பரிமாணங்களைக் கொண்ட கங்கை அமரன், தனது ஆரம்பகால அனுபவம் குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அப்போது ஒரு பாடலுக்காக தனக்கு ரூ.20,000 சம்பளமாகக் கிடைத்ததை அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.
தனது திரைப் பயணத்தின் தொடக்க காலத்தில் பல சிரமங்களைச் சந்தித்தாலும், அந்தத் தொகை தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் வியப்பையும் அளித்ததாக அவர் தெரிவித்தார். இளையராஜாவை விட தான் அதிக சம்பளம் பெற்ற அந்த நிகழ்வு, தனது கலைப் பயணத்தில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார்.