PulseNews
சினிமா

7 தசாப்த கால திரையுலக சகாப்தம் முடிந்தது! சௌகார் ஜானகி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:

பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான சௌகார் ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது பெற்றுள்ள திருமதி சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு உள்ளிட்ட பேரிழப்பாகும். பல்வேறு விருதுகளைப் சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்க்கிக்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் இன்று காலமானார். 94 வயதான அவர் இதயநோய் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சௌகார் ஜானகி மறைவு திரைத்துறையினர் இடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
7 தசாப்த கால திரையுலக சகாப்தம் முடிந்தது! சௌகார் ஜானகி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!
PulseNews சுருக்கம்

திரைப்பட உலகில் ஏழு தசாப்தங்களாகத் தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் இதயங்களை வென்ற மூத்த நடிகை செளகார் ஜானகி காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், செளகார் ஜானகியின் மறைவுச் செய்தி தனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema