சீமான் இயக்கத்தில் அஜித், 3 நாள் கேப்பில் மிஸ் ஆன வாய்ப்பு; தயாரிப்பாளரால் நடந்த முக்கிய மாற்றம்
இயக்குனர், நடிகராக இருந்து அரசியல் களத்தில் புகுந்த சீமான் மீண்டும் நடிகராக படங்களில் நடிக்க தொடங்கியுள்ள நிலையில், இவரது இயக்கததில் அஜித் பிரபு இணைந்து நடிக்க இருந்த திரைப்படம் 3 நாள் கால்ஷீட்டில் நடக்காமல் போனதாக நடிகர் இளவரசு கூறியுள்ளார். பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சீமான. பாரதிராஜா இயக்கிய பசும்பொன், மணிவண்ணன் இயக்கிய ராசாமகன் உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதிய சீமான், மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருப்பார். தொடர்ந்து 1996-ம் ஆண்டு வெளியாக பாஞ்சாலஞ்குறிச்சி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பிரபு, மதுபாலா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, தேவா இசையமைத்திருந்தார். வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அனாதை சிறுவனாக இருக்கும் பிரபுவை தூங்கி வளர்க்கும் கேரக்டரில் நடித்த விஜயகுமாருக்கு, மகேஷ்வரி மகளாக நடித்திருப்பார். குடும்ப உறவுகள் மற்றும் பாசத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் மதுபாலாவின் அப்பா கேரக்டரில் சந்திரசேகர், வில்லனாக மகாநதி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இளவரசு, வில்லன் மகாநதி சங்கர் கேரக்டருக்கு குரல் கொடுத்திருப்பார். மகாநதி சங்கர் நடித்த காரிச்சாமி கேரக்டரின் தம்பியாக பிரசன்னா என்பவர் நடித்திருப்பார். இவரும் விஜயகுமார் மகளான மகேஷ்வரிக்கும் காதல் இருக்கும். இந்த பிரசன்னா என்பவர் நடித்த காதலன் கேரக்டரில் முதலில் அஜித் தான் நடிக்க வேண்டி இருந்துள்ளது. அப்போது அவர் வெளி மாநிலத்தில் படிப்பிடிப்பில் இருந்ததால், 3 நாட்கள் ஆகும் என்று என்று கூறியுள்ளார். அதே சமயம் பிரபுவுக்கும் அந்த கேரக்டலுக்கும் காமினேஷன் ஷாட் இருந்ததால், பிரபு மற்றொரு ஷூட்டிங்கில் இருந்து டேட் கொடுத்ததால் டைம் இல்லை என்று கூறி, படப்படிப்பை தொடங்குமாறு தயாரிப்பாளர் கூறியுள்ளார். இதனால் அந்த படத்தில் அஜித் நடிக்க முடியாமல் போயுள்ளது. இது குறித்து பேசிய இளவரசு, இந்த படத்தில் அஜித் நடித்திருந்தால், இன்றைய நடிகர்களுடனும் நாங்கள் ஈஸியாக ஜெல் ஆகியிருப்போம். நாங்கள் எப்படி படம் எடுக்கிறோம் என்பது அஜித்திற்கு தெரிந்து அதன்பிறகு அவரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கூட எங்களுக்கு கிடைத்திருக்கலாம் என்று இளவரசு கூறியுள்ளார்.

அரசியலில் கவனம் செலுத்தி வரும் சீமான், மீண்டும் நடிப்பு மற்றும் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். இவரது இயக்கத்தில் அஜித் பிரபு நடிக்கவிருந்த ஒரு திரைப்படம், மூன்று நாட்கள் இடைவெளியில் அந்த வாய்ப்பு கைநழுவிச் சென்றதாக நடிகர் இளவரசு தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா மற்றும் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சீமான், பசும்பொன் மற்றும் ராசாமகன் உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதியுள்ளார். மேலும், மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை படத்தில் சீமான் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.