நான் நினைத்தது வரல, இன்னொரு டேக் போலாம்; மம்முட்டியை வைத்து ஒரே காட்சியை 8 டேக் எடுத்த லிங்குசாமி
தமிழ் சினிமாவில் கூட்டுக்குடும்பங்கள் பற்றிய படங்களை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக ஆனந்தம் படத்திற்கு முக்கிய இடம் உண்டு. மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மம்முட்டி முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியை படமாக 7 டேக்குகள் எடுத்தும் சரியாக அமையவில்லை என்று இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு தமிழில் வெளியான சூப்பர் ஹிட் படம் ஆனந்தம். மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. டெல்லி கணேஷ், ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்திற்கு, எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார். படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சிறுவயதில் இருந்து குடும்பத்தை தூக்கி சுமக்கும் ஒரு குடும்ப தலைவனின் கதை தான் ஆனந்தம். இந்த படத்தில், ஒரு காட்சியில் முரளியின் குழந்தைக்கு இருக்கும் பிரச்னையை எப்படி மற்றவர்களிடம சொல்வது என்று பேசுவார். இந்த காட்சி குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய லிங்குசாமி, இந்த படம் முழுமையாக சிறப்பாக வந்ததற்கு முக்கிய காரணம் மம்முட்டி சார் தான். இந்த காட்சியை படமாக்கும்போது 8 முறை டேக் எடுத்தோம். ஆனால் சரியாக வரவில்லை. இதனால் கடுப்பான அவர் உங்களுக்கு என்னதான் வேண்டும் என்று சொல்லுங்கள் என சொன்னார். இதில் ஒரு தடுமாற்றம் போன்ற வாய்ஸ் வேண்டும் என்று சொன்னேன். நான் சொன்னதை கேட்ட அவர், அதெல்லாம் டப்பிங்கில் வரும் என்று சொன்னார். இல்லை சார் இனனொருமுறை பார்ப்போம் என்று நான் சொன்னபோது நடித்து காட்டு என்று சொல்லிவிட்டார். அதன்பிறகு நான் நடிக்கும்போது, அதை ரெக்கார்டு செய்து பார்த்துவிட்டு அதன்படி நடித்தார். அதேபோல் டப்பிங்கில் வரும்போது அந்த குரல் சரியாக அமையவில்லை. குறிப்பாக அந்த சீன் நான் பல முறை முயற்சித்தும் நான் நினைத்த மாதிரி வரவே இல்லை. அதனால் அவரிடம் சென்று சார் திரும்பவும் டப்பிங் பண்ண வேண்டும் என்று சொன்னேன். அப்போது அவர் எது அந்த சீன் தானே என்று கேட்டுவிட்டு, அதன்பிறகு வந்து மீண்டும் பேசினார். பேசிவிட்டு உனக்கு இப்போது திருப்தி தானே என்று கேட்டார். நான் இதுக்கு முன்னாடி பேசின சீனில் இருந்து பாதியும், இதில் இருந்து பாதியும் யூஸ் பண்ணிக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு அவர் இவன் அடங்கமாட்டான் என்று சொல்லிவிட்டு சென்றார். ஆனால் இந்த படம் வெளியானபோது பிரபல பத்திரிக்கையில் தமிழ் நடிகர்கள் எப்படி டப்பிங் பேச வேண்டும் என்று மலையாள நடிகர் மம்முட்டியிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எழுதி இருந்தார்கள் என்று லிங்குசாமி கூறியுள்ளார்.

2001-ம் ஆண்டு வெளியான 'ஆனந்தம்' திரைப்படம், கூட்டுக்குடும்ப கதையம்சம் கொண்ட தமிழ் சினிமாவின் மிக முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில், ஒரு காட்சியை திருப்திகரமாகப் படமாக்க இயக்குனர் லிங்குசாமி எட்டு டேக்குகள் எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏழு டேக்குகள் எடுத்தும் காட்சி சரியாக அமையாததால், மீண்டும் ஒரு டேக் எடுக்க லிங்குசாமி முடிவு செய்துள்ளார். மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா மற்றும் சினேகா உள்ளிட்ட பலர் நடித்த இந்தத் திரைப்படம், அந்த காலகட்டத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.