மனுஷனாயா நீ? அந்த வாயில்லா ஜீவனுக்கு என்ன தெரியும்... ஓடும் ரயிலில் மனிதனின் அலட்சியத்தால் பரிதாபமாகப் பலியான நாய்! பதறவைக்கும் வீடியோ...!!!
ஓடும் ரயிலில் நாயை அவசரமாக ஏற்ற முயன்ற நபரின் அலட்சியத்தால், பரிதாபமாக நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. ரயில் புறப்பட்டு நகரத் தொடங்கிய நிலையில், அந்த நபர் முதலில் ரயிலில் ஏறியதுடன் நாயையும் மேலே இழுக்க முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக நாய் தண்டவாளத்துக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி உயிரிழந்தது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஓடும் ரயிலில் நாயை ஏற்ற முயன்ற நபர் ரயில் நடைமேடையில் இருந்து புறப்பட்டு மெதுவாக நகரத் தொடங்கியபோது, அந்த நபர் அவசரமாக ரயிலில் ஏறினார். அவருடன் அழைத்து வந்த நாயும் இருந்தது. ரயில் நகர்ந்து கொண்டிருந்த நிலையிலும், நாயை தன்னுடன் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் அதை மேலே இழுக்க அவர் முற்பட்டதாக கூறப்படுகிறது. இதையும் படிங்க: இது என்னப்பா... ராஜநாகத்துக்கு போதை ஏறிடுச்சா? இப்படி தள்ளாடுது...... இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!! ரயிலின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாய் நிலைதடுமாறியது. அடுத்த சில நொடிகளில் அது தண்டவாளத்துக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கியது. இதில் படுகாயமடைந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது. அலட்சியத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனம் ரயில் முழுமையாக நின்ற பிறகு நாயை அழைத்துச் செல்வதற்கு பதிலாக, ஓடும் ரயிலில் ஏற்ற முயன்றதே விபத்துக்கு காரணமாக அமைந்ததாக பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, பேச முடியாத ஒரு பிராணி மனிதனின் அவசர முடிவால் உயிரிழந்துவிட்டதாகக் கூறி, அந்த நபரின் பொறுப்பற்ற செயல் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரயில் நிலையங்களில் பயணிகள் அவசரமாக ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த காட்சி மீண்டும் விலங்குகளின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. ऐसे लोगों को क्या कहना चाहेंगे 😡 इस भाई के कारण आज एक बेजुबान कुत्ते का जान चली गई 😔 इतना हादसा होने के बाद भी लोग समझते नहीं उनको बहुत जल्दी होता है चलती ट्रेन में ऐसा कौन करता है,कुत्ता को क्या पता था ऐसा हो जाएगा 🥺 pic.twitter.com/6k08Y9Grzg — Subhajit Das (@SantaniSubhajit) August 23, 2026

இயங்கத் தொடங்கிய ரயிலில் நாயை அவசரமாக ஏற்ற முயன்ற நபரின் கவனக்குறைவால், அந்த விலங்கு பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. ரயில் நகரத் தொடங்கியதும் அந்த நபர் முதலில் ரயிலில் ஏறி, பின் நாயைத் தன்னுடன் இழுக்க முயன்றார்.
இந்த முயற்சியின் போது எதிர்பாராத விதமாக நாய் நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் சிக்கிக்கொண்டது. இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.